உலகில் பல நிகழ்வுகள் விநோதமாகவும், நம்ப இயலாததாகவும் அமைகின்றன.
வெற்றிடம் ஒன்றை சிலையாக உருவாக்கியிருக்கிறேன் என்று சொல்லி எள்ளின் நுனி அளவு கூட இல்லாத சிலையை இத்தாலிய சிற்பி ஏலம் விட, வெற்றிடம் 13 லட்சம் ரூபாய்க்கு விலை போயிருக்கிறது. இந்த வெற்றிடச் சிலையை உருவாக்கியிருப்பவர் 67 வயதான இத்தாலிய சிற்பியான சல்வடோர் கரவ்.
6 ஆயிரம் முதல் 9 ஆயிரம் யூரோ வரை விலை போகும் என்று வெகுவாக எதிர்பார்த்த நிலையில், கடைசியில் 1500 யூரோவுக்குத்தான் (13 லட்சம்) அந்த வெற்றிடச் சிலை ஏலம் போனது. இந்த வெற்றிடச் சிலைக்கு "நான்' என்று பெயரையும் அந்த சிற்பி சூட்டியுள்ளார்.
"உண்மைதான்... நான் உருவாக்கிய சிலைக்கு உருவம் இல்லை. ஆனால் அந்த வெற்றிடத்தில் நான் உருவாக்கிய சிலை இருக்கிறது. ஆனால் கண்ணுக்குத் தெரியாது. அந்த வெற்றிடச் சிலைக்கு எடை உண்டு..' என்று விளக்குகிறார் விசித்திர சிற்பியான சல்வடோர் கரவ்.உண்மையில் சிற்பி எந்த ஒரு சிலையையும் செய்யாமல், ஒரு பீடத்தை உருவாக்கி, நான்கு புறமும் கண்ணாடிகளை வைத்து அதற்குள் சிலை எதையம் வைக்காமல் காலியாக விட்டுவிட்டார். கண்ணாடி வேலிக்குள் இருக்கும் வெற்றிடத்தைக் சிலையாக உருவகம் செய்து .. அந்த வெற்றிடம்தான் நான் உருவாக்கிய சிலை என்று சல்வடோர் கரவ் சொல்ல .. அதை ஏலத்தில் வாங்கவும் ஒருவர் தயாராகியுள்ளார்..!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.