ஞாயிறு கொண்டாட்டம்

பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன்

தமிழிலும், தெலுங்கிலும் தொடர்ந்து நடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன். இவரது நடிப்புக்கு தமிழைவிட தெலுங்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது.

DIN

தமிழிலும், தெலுங்கிலும் தொடர்ந்து நடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன். இவரது நடிப்புக்கு தமிழைவிட தெலுங்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. இதையடுத்து தெலுங்கில் படவாய்ப்புகள் குவிந்து வருகின்றன. ஸ்ருதிஹாசன் தற்போது, பிரஷாந்த் நீல் இயக்கும் "சலார்' படத்தில் பிரபாஸூக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் ஒரு பெண் பத்திரிகையாளராக நடித்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையே தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிக்கும் புதிய படத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் நடிக்கவிருப்பதாக தெலுங்கு படவுலகில் தகவல் ஒன்று பரவி வருகிறது. "பல்பு', "கிராக்' போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய கோபிசந்த் மாலினேனி சமீபத்தில் ஸ்ருதி ஹாசனை சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில் தெலுங்கில் முன்னணி ஹீரோயினாக இருக்கும் ஸ்ருதிஹாசன், 60 வயதாகும் பாலகிருஷ்ணாவுடன் எவ்வாறு நடிப்பார் என கேள்வி எழுந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பூரில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் மர்ம மரணமா? நயினார் நாகேந்திரன் கேள்வி!

பாஜக எம்பி மனோஜ் திவாரி கன்வாா் யாத்திரை

வங்கதேசத்தில் வேகமெடுக்கும் டெங்கு பரவல்! பலி எண்ணிக்கை 83 ஆக அதிகரிப்பு!

டெவான் கான்வே, டேரில் மிட்செல் அரைசதம்; 2-வது இன்னிங்ஸில் ஜிம்பாப்வே தடுமாற்றம்!

ஓபிஎஸுக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி!

SCROLL FOR NEXT