ஞாயிறு கொண்டாட்டம்

சித்திரைச் செவ்வானம்

பிரபல சண்டைப் பயிற்சி இயக்குநர் சில்வா, இப்போது  "சித்திரைச் செவ்வானம்' படத்தின் இயக்குநர். சமுத்திரக்கனி,   பூஜா கண்ணன்,  ரீமா கல்லிங்கல் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

DIN


பிரபல சண்டைப் பயிற்சி இயக்குநர் சில்வா, இப்போது  "சித்திரைச் செவ்வானம்' படத்தின் இயக்குநர். சமுத்திரக்கனி, பூஜா கண்ணன்,  ரீமா கல்லிங்கல் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். பூஜா கண்ணன், சாய் பல்லவியின் தங்கை என்பது குறிப்பிடத்தக்கது. ஏ.எல். விஜய் இப்படத்தின் கதை எழுத, சில்வா இயக்கியுள்ளார். படம் குறித்து சில்வா பேசும் போது... ""இயக்குநர் ஏ.எல். விஜய் என்னிடம் ஒரு கதை சொன்னார். அட்டகாசமாக இருந்தது.

இந்தக் கதையை நீங்கள் இயக்குங்கள் நன்றாக இருக்கும் என்றார். எனக்கும் அந்தக் கதையை இயக்கலாம் என்று தோன்றியது. உடனடியாக அந்த கதையை மேம்படுத்தி, முழு திரைக்கதையாக மாற்றினோம். பின் சமுத்திரகனியிடம் இந்தக் கதையை சொன்னேன். சொன்ன மறுநொடியே படப்பிடிப்புக்கு தயாரானார். அப்படி உருவானது தான் இந்தப் படம். நான் ஸ்டண்ட் இயக்குநர் என்பதால் இது ஆக்ஷன் படம் என்று நினைத்து விடாதீர்கள், நெஞ்சை தொடுவது போன்ற உணர்வு பூர்வமான படம்.

அப்பாவுக்கும் மகளுக்குமான அன்பு மிகுந்த சம்பவங்கள்தான் கதை. சமூகத்தில் ஏற்படக்கூடிய சிக்கல், அதை அவர்கள் கடப்பது தான் கதை. மகள் பாத்திரத்திற்கு நடிகை சாய்பல்லவியின் தங்கை பூஜா கண்ணன் சரியாக இருப்பார் என தோன்றியது. அவரை நடிக்க வைத்திருக்கிறோம்.  நானும் இயக்குநர் விஜய்யும் இணைந்து இப்படத்தை தயாரித்திருக்கிறோம். நினைத்ததை விட மிக அழகான திரைப்படமாக வந்திருக்கிறது''  என்றார். ஜீ 5 ஒடிடி தளத்தில் டிசம்பர் 3-ம் தேதி படம் வெளியாகவுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நியூசிலாந்தின் 40 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேக்கப் டஃபி!

தருமபுரி அருகே சாலை விபத்து : இரு இளைஞர்கள் பலி!!

“வாக்காளர்களை மீண்டும் சேர்க்க வலியுறுத்தல்!” துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

கைவிடப்பட்ட சிவகார்த்திகேயன் - சிபி சக்ரவர்த்தி திரைப்படம்?

இங்கு ரீ-டேக் இல்லை! அஜித் குமார் ரேசிங் ஆவணப்பட டிரைலர்!

SCROLL FOR NEXT