இளவயதினர் பாதிப்பு
உலக அளவில் இளவயதினர் பலர் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படக்கூடிய வர்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
உலக அளவில் இளவயதினர் பலர் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படக்கூடிய வர்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
பணி சுமை, குடும்ப சூழல், நகர்ப்புற வாழ்க்கை என பரபரப்பான சூழலுக்கு மத்தியில் உலகம் முழுவதும் 30 முதல் 79 வயது கொண்ட நபர்கள் உயர் ரத்த அழுத்தத்திற்கு அதிக அளவில் ஆளாகி வருகின்றனர். 184 க்கும் மேற்பட்ட நாடுகளில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட உயர் ரத்த அழுத்தம் குறித்த ஆய்வில் 10 கோடி மக்களிடம் மூன்று விதமான பிரிவுகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்தியாவில் கடந்த 1990-ஆம் ஆண்டு உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையில் பெண்கள் 28 சதவீதமாகவும், ஆண்கள் 29 சதவீதமாகவும் இருந்தனர். தற்போது பெண்கள் 32 சதவீதம் பேரும் ஆண்கள் 38 சதவீதம் பேரும் உயர் ரத்த அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
உலக அளவில் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை கடந்த 30 ஆண்டுகளில் இரு மடங்காக அதிகரித்து இருப்பதாக ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது. 1990-ஆம் ஆண்டு கணக்கெடுப்புப்படி உலக அளவில் 30- 79 வயதிற்குட்பட்ட 33.1 கோடி பெண்களும் , 31.7 கோடி ஆண்களும் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளது. அதன்படி 62.6 கோடி பெண்களும், 65.2 கோடி ஆண்களும் இந்த நோய் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.
தற்போது கரோனா பாதிப்பிலிருந்து மீண்ட இளவயதினர் பலர் உயர் ரத்த அழுத்தம், இருதய நோய் போன்ற பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இது ஒரு புறம் இருக்க சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ளிட்ட தொற்றா நோய்கள் மீதான பாதிப்புகள் சமீபகாலமாக அதிகரித்து வருவது உடல் ஆரோக்கியம் மீதான பல்வேறு சவால்களை ஏற்படுத்தி வருகிறது.