இயக்குநர் கதிர் இயக்கத்தில்....
90-களில் தனக்கென தனி ரசிகர் வட்டத்தை உருவாக்கி வைத்திருந்தவர் இயக்குநர் கதிர். "இதயம்', "உழவன்', "காதல் தேசம்', "காதலர் தினம்' என இவர் இயக்கிய படங்கள் அனைத்தும் இளைஞர்களை பெரிதாக கவர்ந்தவை.
90-களில் தனக்கென தனி ரசிகர் வட்டத்தை உருவாக்கி வைத்திருந்தவர் இயக்குநர் கதிர். "இதயம்', "உழவன்', "காதல் தேசம்', "காதலர் தினம்' என இவர் இயக்கிய படங்கள் அனைத்தும் இளைஞர்களை பெரிதாக கவர்ந்தவை. சில காரணங்களால் சினிமாவில் தொடர்ந்து இயங்காத இவர், தற்போது மீண்டும் வருகிறார். கதிர் இயக்கத்தில் கடைசியாக 2002-ஆம் ஆண்டு "காதல் வைரஸ்' என்ற படம் வெளியானது.
அந்த படம் தோல்வி அடையவே அவர் அதன் பின்னர் வேறு எந்த படத்தையும் இயக்கவில்லை. இந்நிலையில் தற்போது இயக்குநர் கதிர் மீண்டும் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. புதுமுக நடிகர் கிஷோர் என்பவர் அந்த படத்தில் கதாநாயகனாக நடிக்க இருப்பதாகவும் ஆர்.கே இன்டர்நேஷனல் நிறுவனம் அந்தப் படத்தைத் தயாரிப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.