பதினாறு வயதே ஆன இந்திய செஸ் கிராண்ட் மாஸ்டர் ஆர்.பிரக்ஞானந்தாவுக்கு வேலைவாய்ப்பு வழங்கி கெளரவித்துள்ளது இந்தியன் ஆயில் நிறுவனம்.
""சென்னையைச் சேர்ந்த பள்ளி மாணவர் பிரக்ஞானந்தா செஸ் விளையாட்டில் பல சாதனைகளைத் நிகழ்த்தி வருகிறார். 11-ஆம் வகுப்பு படித்து வரும் அவர், நடப்பு உலக சாம்பியன் நார்வேயின் மாக்னஸ் கார்ல்ஸனை 2 முறை தோற்கடித்த உலகின் இளம் வீரர் என்ற சிறப்பைப் பெற்றுள்ளார்.
2013-இல் 8 வயது உலக சாம்பியன்ஷிப், 2015-இல் 15 வயது உலக சாம்பியன் பட்டங்களை வென்றுள்ள பிரக்ஞானந்தா, 2018-இல் கிராண்ட் மாஸ்டர் அந்தஸ்தையும் பெற்றார். அவரது சகோதரி வைஷாலியும் மகளிர் கிராண்ட்மாஸ்டர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து பிரக்ஞானந்தா கூறியதாவது:
எனக்கு இந்த வயதில் வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது மிகப் பெரிய கெளரவமாகும். கல்லூரி படிப்பு முடிந்த பின்னர் பணியில் சேரலாம். எனது விளையாட்டுத் திறனுக்கு ஐஓசி பங்கேற்பு உறுதுணையாக இருக்கும். அடுத்து செஸ் ஒலிம்பியாட் தான் எனக்கு மிகவும் முக்கியமான போட்டி. பல்வேறு நாடுகளின் பலமான அணிகள் சவால் இருந்தாலும், நமது சென்னையில் இப்போட்டி நடப்பது மிகவும் மகிழ்ச்சி தருகிறது. சாதகமாகவும் இருக்கும் '' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.