கல்வி பயில உதவி
சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த சுப்ரமணியன் தனது பணி ஓய்வுக்குப் பிறகு கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கிராமப்புறங்களில் பின் தங்கிய நிலையில் உள்ள பள்ளி
சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த சுப்ரமணியன் தனது பணி ஓய்வுக்குப் பிறகு கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கிராமப்புறங்களில் பின் தங்கிய நிலையில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள், அகராதி, கவிதை நூல்கள் மற்றும் பல்வேறு கல்வி உபகரணங்களை தனது சொந்த செலவில் வழங்கி வருகிறார். இதன் மூலம் அந்த மாணவர்கள் சிறப்பான முறையில் கல்வி பயில தன்னால் முடிந்த உதவி என்று சொல்லி மகிழ்கிறார்.
"நகரத்தில் உள்ள மாணவர்களுக்கு பல்வேறு வசதி வாய்ப்புகள் உள்ளன. கிராமப்புற மாணவர்களுக்கு அத்தகைய வசதிகள் இல்லை. அதனால் அந்த மாணவர்களுக்கு உதவ முடிவு செய்தேன்'' என்கிறார் சுப்ரமணியன்.
இதன் தொடர்ச்சியாக ராணிப்பேட்டை மாவட்டம் ராமபாளையம் கிராமத்தில் 62 பள்ளி மாணவர்களுக்கும், வணக்கம்பாடியில் 26 மாணவர்களுக்கும், திருவண்ணாமலை மாவட்டம் பெலாசூர் கிராமத்தில் 76 மாணவர்களுக்கும், குருவிமலை கிராமத்தில் 82 மாணவர்களுக்கும் கல்வி உபகரணங்கள் வழங்கினார். நிகழ்வில் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.