முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

ஐம்பூதங்களின் தாக்கம்

ஹாலிவுட் சினிமாவில் சமீப காலத்தில் வெளிவந்து பெரும் வெற்றியைப் பெற்ற படம் "கேஸ்பர் வென் டைன்'.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:36 AM
பகிர்:


ஹாலிவுட் சினிமாவில் சமீப காலத்தில் வெளிவந்து பெரும் வெற்றியைப் பெற்ற படம் "கேஸ்பர் வென் டைன்'. லாரி பென் எழுதி ஜார்ஜ் இயக்கத்தில் வெளிவந்த இப்படம் ஹாலிவுட் சினிமாவில் மிகப் பெரும் வசூலையும் பெற்றது. இப்படம் தற்போது தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது.  தமிழாக்க படத்துக்கு "அக்னி அரக்கன்' என பெயரிடப்பட்டுள்ளது. பிரபல தயாரிப்பாளர் ரேஸ் கோர்ஸ் ரகுநாத் இப்படத்தின் மொழி ஆக்க உரிமையைப் பெற்று தமிழாக்கத்துக்கான வசனங்களையும் எழுதியுள்ளார். 

இது குறித்து அவர் பேசும் போது... " மற்ற மொழி சினிமாக்களை பார்ப்பதில் எனக்கு எப்போதுமே அலாதி ப்ரியம். அப்படி பார்த்ததில் என்னை மிகவும் கவர்ந்த படமாக இந்த ஹாலிவுட் படம் அமைந்தது. அதை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கொண்டு சேர்க்கும் விதமாகத்தான் இந்த முயற்சியை எடுத்தேன். முறையாக அதன் அனுமதியை பெற்று இப்போது தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. ஐம்பெரும் பூதங்களின் தாக்கமும், நேசமும் இல்லாமல் இந்த உலகத்தில் எதுவும் இயங்காது. ஒரு பூ பூப்பதில் தொடங்கி எல்லாவற்றுக்கும் ஐம்பூதங்களின் தேவை இருக்கிறது. தற்செயலாக எரிய தொடங்கும் நெருப்பு, உலகின் சில இடங்களில், நகரங்களில் பரவத் தொடங்குகிறது. அணைக்க முடியாத நெருப்பாக பரவும் அது, பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. பிறகு வித்தியாசமான முயற்சியில் அந்த தீயை அணைக்க முயல்கிறார்கள். அந்த முயற்சியின் பரபரப்பு நிமிடங்கள்தான் திரைக்கதை. படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் 75 சதவீதம் முடிந்து விட்டது. விரைவில் இப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது'' என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.