முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

பாடலுக்கு வரவேற்பு

பிரஷாந்த் நீண்ட இடைவேளைக்கு பிறகு கதாநாயகனாக நடித்துள்ள படம் "அந்தகன்'. இந்தப் படத்தை இயக்குநரும், பிரஷாந்த்தின் அப்பாவுமான தியாகராஜன் இயக்கியுள்ளார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:38 AM
பகிர்:

பிரஷாந்த் நீண்ட இடைவேளைக்கு பிறகு கதாநாயகனாக நடித்துள்ள படம் "அந்தகன்'. இந்தப் படத்தை இயக்குநரும், பிரஷாந்த்தின் அப்பாவுமான தியாகராஜன் இயக்கியுள்ளார். இந்தப் படத்தை பிரஷாந்த்தின் ஸ்டார் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் பிரஷாந்த்துடன் சிம்ரன், பிரியா ஆனந்த், கார்த்திக், சமுத்திரக்கனி, யோகி பாபு, ஊர்வசி, கே.எஸ்.ரவிக்குமார், வனிதா விஜயகுமார், லீலா தாம்சன், மனோபாலா, பெசன்ட் ரவி, மோகன் வைத்தியா, லக்ஷ்மி பிரதீப், ரேகா சுரேஷ், செம்மலர், கவிதா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ரவி யாதவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். பட்டுக்கோட்டை பிரபாகர் இந்தப் படத்துக்கு வசனம் எழுதியுள்ளார்.

இந்த நிலையில் இந்தப் படத்திலிருந்து "என் காதல்' என்ற பாடல் வெளியாகியுள்ளது. விவேக் எழுதியுள்ள இந்தப் பாடலை சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.