செல்லப்பிராணியுடன் கீர்த்தி
தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். தமிழ் மற்றும் தெலுங்கில் பல வெற்றிப்படங்களில் நடித்து வரும் இவர், "இது என்ன மாயம்' படத்தின் மூலம் அறிமுகமானார்.
தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். தமிழ் மற்றும் தெலுங்கில் பல வெற்றிப்படங்களில் நடித்து வரும் இவர், "இது என்ன மாயம்' படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு சிவகார்த்திகேயனுடன் இணைந்து "ரஜினி முருகன்' படத்தில் நடித்து பிரபலமானார். தொடர்ந்து "தொடரி', "பைரவா', "ரெமோ', "சாமி 2', "நடிகையர் திலகம்', "சர்க்கார்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இதையடுத்து ரஜினியுடன் "அண்ணாத்த' படத்துக்குப் பின் தொடர்ந்து அருண் மாதேஷ் இயக்கத்தில் செல்வராகவனுடன் இணைந்து "சாணிக் காயிதம்' படத்தில் நடித்து முடித்துள்ளார்.
அதேபோன்று தெலுங்கில் மகேஷ் பாபுவுடன் "சர்காரு வாரி பாட்டா' படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் தனது செல்லப்பிராணியுடன் கொஞ்சி மகிழும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கீர்த்தி சுரேஷ் வெளியிட்டுள்ளார். சமூக வலைத்தளத்தில் எப்போதும் இருக்கும் கீர்த்தியின், இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.