முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

தமிழரசன்!

இயக்குநர் பாபு யோகேஸ்வரன் "தாஸ்' படத்தின் மூலம் கோடம்பாக்கம் வந்தவர். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:48 AM
பகிர்:

இயக்குநர் பாபு யோகேஸ்வரன் "தாஸ்' படத்தின் மூலம் கோடம்பாக்கம் வந்தவர். நீண்ட இடைவெளிக்குப் பின் "தமிழரசன்' படத்தின் மூலம் மீண்டும் வருகிறார்.  விஜய் ஆண்டனி, ரம்யா நம்பீசன் நடிக்கின்றனர். இளையராஜா இசை.

""தமிழரசன் என்கிற 40 வயதுக்காரர். மனைவி, குழந்தை என சாமானிய வாழ்க்கை.  நாம் ஒன்று நினைத்தால் வாழ்க்கை விளையாட்டில் போய்ச் சேருகிற இடம் வரும். எவ்வளவோ கஷ்டங்கள் அனுபவிக்கிறோம், சிக்கல்களிலிருந்து விடுபட தவிக்கிறோம். இத்தனைக்கும் நடுவில் தாமரை இலைத் தண்ணீர் போல இங்கேயுள்ள வாழ்க்கையில் ஒரு நம்பிக்கை இருக்கிறதே... அது எனக்கு ரொம்ப ஆச்சரியம். 

அப்படி ஓர் இடம் இங்கே வந்து போகிறது. அதைக் கடக்கிற நேரத்தில் அவனுக்கு வந்து போகிற அனுபவங்கள்தான் முழுப் படமும். இதில் வருகிற அழுத்தம் எல்லாத் திசைகளுக்கும் உங்களைக் கொண்டு போகும். நம்பிக்கையோடு காத்திருக்கிறேன்'' என்றார் இயக்குநர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.