முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

தனி பாடலுக்கு வரவேற்பு

மேலை நாடுகளைப் போல இங்கேயும் சுதந்திரப்பாடல்கள், ஆல்பங்கள் வெளிவர ஆரம்பித்துள்ளன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:28 AM
பகிர்:

மேலை நாடுகளைப் போல இங்கேயும் சுதந்திரப்பாடல்கள், ஆல்பங்கள் வெளிவர ஆரம்பித்துள்ளன.  ஹாலிவுட் திரையுலகில் திரை நுழைவிற்கான ஒரு முன்னோட்டமாக குறும்படங்களும் ஆல்பங்களும் இருப்பது போல் இங்கேயும் அந்தப் போக்கு தொடங்கியுள்ளது. அந்த வகையில் வெளியாகி பலரின் வரவேற்பையும் பெற்றிருக்கும் பாடல் "லவ் யூ பேபி'.

அனுகிரஹா எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. பிரசாத் ராமன் இயக்கியுள்ளார். பிரேம்ஜி அமரன் பாடியுள்ளார்.  இந்தப் பாடலில் நடிகர் சந்தோஸ் பிரதாப் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக இப்பாடலில், என்னங்க சார் உங்க சட்டம், சகா ஆகிய படங்களில் நடித்து கவனம் பெற்ற ஐரா நடித்துள்ளார்.

மேலும் இப்பாடலில் "ஷாஜகான்' படத்தில் விஜய் காதலர்களை சேர்த்து வைப்பது போல ஒரு அம்சத்தை  பாடலுக்குள் வைத்திருக்கிறார்கள். காதலர்களை சேர்த்து வைப்பவராக ராகுல் தாத்தா அசத்தி இருக்கிறார். இந்தப்பாடலை தனது தனித்துவ இசையால் அழகுப்படுத்தி இருக்கிறார் இசை அமைப்பாளர் ராக்கேஷ் அம்பிகாபதி.

பாடல்களை எழுதிய முத்தமிழும், பிரசாத் ராமனும் எழுதியுள்ளனர்.  ஒளிப்பதிவு செய்துள்ளார்  சந்தோஷ் பாண்டி, ரிச்சட் கிறிஸ்டோபர் நடனம் அமைத்துள்ளார்.  இணையத்தில் கடந்த 20-ஆம் தேதி வெளியான இப்பாடல் தற்போது வரை பெரும் வைரலாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.