சிறப்பான ஓவியங்கள் வரையும் பெண் சித்த மருத்துவர், தனது திருமணத்துக்கு வந்தவர்களுக்கு தான் வரைந்த ஓவியத்துடன் ஒளவையாரின் ஆத்திசூடி புத்தகத்தையும் பரிசாக அளித்துள்ளார்.
நாகப்பட்டினம் மாவட்டத்துக்கு உள்பட்ட வேதாரண்யத்தை அடுத்த பஞ்சநதிக்குளம் கீழச்சேத்தி கிராமத்தைச் சேர்ந்தவர் சித்த மருத்துவர் அ.ஆர்த்தி (25), ஓவியங்கள் வரைவதில் ஆர்வமுடையவர்.
சித்த மருத்துவ மேம்பாட்டுக்கும் ஓவியக் கலையை பயன்டுத்த முயல்கிறார் இந்த மருத்துவர். ஆர்த்திக்கும் பொறியாளர் பாலசந்திரனுக்கும் கடந்த பிப்ரவரியில் திருமணம் நடைபெற்றது. நிகழ்வில் வாழ்த்த வந்தவர்களுக்கு மணமக்கள் அளித்த பரிசு அனைவரையும் வியக்கச் செய்தது.
ஒளவையார் எழுதிய ஆத்திசூடியின் மூலத்துக்கு விரிவுரையுடன், ஒளவையாரின் படத்துடன் தான் வரைந்த ஓவியங்களையும் பரிசளித்தார். இது குறித்து சித்த மருத்துவர் அ.ஆர்த்தி கூறியதாவது:
""பள்ளியில் படிக்கும் போது ஓவியப் போட்டிக்காக வரைய முனைந்தேன். அதைப் பார்த்த எனது தந்தை தந்த ஊக்கம் தொடர்ந்து வரையும் எண்ணத்தை ஏற்படுத்தியது.
புத்தகத்தில் மட்டுமல்ல திருமண அழைப்பிதழிலும் நான் வரைந்த ஓவியங்கள்தான் இடம் பெற்றது. இன்றைய சூழலில் நன்னெறிகளைக் கற்பிப்பது அவசியமாக உள்ளது. அது ஒளைவையின் படைப்பில் இருக்கிறது. அப்பா அமிர்தலிங்கம் பள்ளி ஆசிரியர் என்பதால் ஆத்திசூடியின் மூலத்துக்கு விளக்கவுரை எழுதினார். ஆரோக்கியத்துக்கு சித்த மருத்துவ முறை அவசியம். அதனை கட்டுரையாக நான் எழுதினேன். ஒளவையின் சிந்தனை, சித்த மருத்துவ சிறப்பு, வண்ண ஓவியம் என புத்தகமாக மாறியது'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.