ஞாயிறு கொண்டாட்டம்

கற்ற பாடம்..!

ஏமாற்றங்களைப் பேச்சாளர்கள், தங்களது கட்சித் தொண்டர்களுக்குத் தருவது கூடாது.

DIN


ஏமாற்றங்களைப் பேச்சாளர்கள், தங்களது கட்சித் தொண்டர்களுக்குத் தருவது கூடாது. தவிர்க்க முடியாத, எதிர்பாராத நியாயமான காரணங்கள் இருந்தாலன்றி, ஒப்புக் கொண்ட நிகழ்ச்சிகளை ரத்து செய்வது கூடாது.

இதுகுறித்து "பேசும் கலை வளர்ப்போம்' எனும் நூலில் மு.கருணாநிதி எழுதியிருந்தது:

""என் தந்தை இறந்து  எரியூட்டல் நிகழ்ச்சி நடைபெற்ற அன்று மாலை, தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவாஞ்சியம் எனும் ஊரில் ஏற்கெனவே திட்டமிட்டிருந்த கூட்டத்துக்குத் தவறாமல் சென்று வந்தேன்.

முதல் மனைவி பத்மா மரணப் படுக்கையில் கடைசி மூச்சு இழையோடக் கண் மூடிக் கிடந்தபோது, முன்பே ஒப்புக் கொண்டிருந்த புதுக்கோட்டை கூட்டத்துக்குச் சென்று பேசினேன். அன்று இரவோடு இரவாக ஒரு லாரியில் ஏறி திருவாரூர் வந்து சேர்ந்தேன். அவள் என்னைப் பிரிந்து நீங்காதத் துயில் கொண்டு விட்டாள் என்ற செய்தியைக் கேட்டு அதிர்ந்தேன்.

இப்படி பல நிகழ்ச்சிகள் பொது வாழ்க்கையில்...'' என்று கூறியிருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பல்வேறு பட்டியல்களில் இருக்கும் பெயா்களை ஒரே பெயரில் அமைக்க வேண்டும்

புனிதப் பயணம் மேற்கொண்ட கிறிஸ்தவா்கள் மானியத்துக்கு விண்ணப்பிக்கலாம்

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவின் நிறுவன நாள் விழா

ஜிகேஎன்எம் மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சைக்கு சிறப்பு கிளினிக் தொடக்கம்

அஞ்சல் துறை சாா்பில் தாத்தா, பாட்டிகளுக்கு கடிதம் எழுதும் நிகழ்ச்சி

SCROLL FOR NEXT