நிர்மலமான தூக்கத்தில் களங்கமற்ற உள்ளத்தில் தோன்றும் கனவுகள் பலனளிக்கின்றன என்பது இந்துக்களின் நம்பிக்கை. வாழ்க்கையில் பலர் தாங்கள் கண்ட கனவு நிஜமானதாகக் கூறுவர். ஆனால், கனவுகளுக்கு நடப்பதைப் பலருக்கு முன்கூட்டியே உணர்த்தும் சக்தி இருப்பதாக மருத்துவத் துறையினரும் கூறுகின்றனர். மனிதர்கள் தூங்கும்போது, அவர்களின் மூளையும், இதயமும் ஓய்வெடுக்காது. தூக்கும்போது சிந்தனை செய்வோருக்கே கனவுகள் உதிக்கும் என்கிறார்கள்.
கவிஞர் கண்ணதாசனுக்கு வந்த கனவுகள் பல வாழ்க்கையில் நடைபெற்றதாக அவர் பலமுறை கூறியிருக்கிறார். அவற்றில் சிலவற்றை பார்ப்போம்:
ஒருநாள் காலையில் காந்தியடிகளைச் சுட்டுக் கொன்றுவிட்டதாகக் கனவு கண்ணதாசனுக்கு வந்ததாம். அன்று மாலை வானொலியில், கண்ணீரோடு சொல்லப்பட்ட செய்திதான் காந்தியடிகள் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பதாகும்.
தனக்கு பல் விழுந்ததாக கண்ணதாசனுக்கு கனவு வந்துள்ளது. மறுநாளே அவர் மீது நீதிமன்றத்தில் புதிய வழக்கு ஒன்று பதிவாகியுள்ளது.
இருபது ஆண்டாக, தான் தினமும் படிப்பதாகக் கனவு வந்துள்ளது. இவ்வாறு வந்த நாள் முதல் தன்னுடைய புகழ் உயர்வு அடைந்ததாக கண்ணதாசன் கூறியிருக்கிறார்.
பலமுறை ரயிலுக்குப் போகும்போது தவறவிடுவதாகக் கனவு வந்துள்ளது. அப்போதெல்லாம் நல்லதொரு சந்தர்ப்பத்தை அவர் இழந்திருக்கிறார்.
"கனவில் வெள்ளம் வந்தால் பணம் வருகிறது. அந்த வெள்ளம் வடியும்போது, வந்த பணம் செலவாகிறது' என்று கூறியிருக்கிறார் கண்ணதாசன்.
1971-ஆம்ஆண்டு தேர்தலில் தன்னை யானை துரத்திக் கொண்டு ஓடி வந்து மாலை போடுவதுபோன்ற கனவு கண்ணதாசனுக்கு வந்துள்ளது. ஆனால், அந்தத் தேர்தலில் அவர் ஆதரித்த "இந்திரா காங்கிரஸ்' கட்சி பெரும்பான்மை பலத்துடன் மத்தியில் ஆட்சியைப் பிடித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.