ஞாயிறு கொண்டாட்டம்

போனின்றி அமையாது உலகு

நீரின்றி அமையாது உலகு' என்றார் வள்ளுவர். இந்தக் காலத்தில் "மொபைல் போன் இன்றி அமையாது உலகு' என்ற நிலை உள்ளது.

DIN

'நீரின்றி அமையாது உலகு' என்றார் வள்ளுவர். இந்தக் காலத்தில் "மொபைல் போன் இன்றி அமையாது உலகு' என்ற நிலை உள்ளது. அந்த அளவிற்கு மொபைல் போன் நம்முடைய வாழ்க்கையில் இரண்டறக் கலந்து விட்டது. இன்றைய வாழ்க்கையில் மொபைல் போன் நமது இன்ப துன்பங்களில், கஷ்ட நஷ்டங்களில் பங்கெடுத்து வருகிறது. மனித உறவில் பல்வேறு சிக்கல்களுக்கும் பிரச்னைகளுக்கும் காரணமாகவும் அது உள்ளது.

மொபைல் போன் என்பது இன்று மனிதர்களின் மூன்றாவது கையாக மாறிவிட்டது. அப்படி மொபைல் போனை மையமாக வைத்து "போனின்றி அமையாது உலகு' என்கிற டேக் லைனுடன் "ரிங் ரிங்' என்கிற பெயரில் ஒரு படம் உருவாகி உள்ளது. இப்படத்தை இயக்குநர் சக்திவேல் இயக்கி உள்ளார்.

இப்படத்தை தியா ஸ்ரீ கிரியேஷன்ஸ் மற்றும் ரூல் பிரேக்கர்ஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் ஜெகன் நாராயணன், சக்திவேல் தயாரித்துள்ளனர். திருமணத்திற்கு முன்பு காதலர்கள் போனை மாற்றிக் கொண்ட கதை "லவ் டுடே' என்றால் திருமணத்திற்குப் பிறகு தம்பதிகள் போனை மாற்றிக் கொண்ட கதை "ரிங் ரிங்'. திருமணத்துக்குப் பிறகு நான்கு தம்பதிகள் போனை மாற்றிக் கொள்கிறார்கள்.

அதற்குப் பிறகு அவர்கள் வாழ்க்கையில் நிகழும் நகைச்சுவையான, சுவாரஸ்யமான, மர்மங்கள் நிறைந்த, விறுவிறுப்பான சம்பவங்களைக் கொண்டு இந்தப் படம் உருவாகி இருக்கிறது.

நான்கு தம்பதிகளுக்கான பின்புலம் நான்கும் தனித்தனியாக இருக்கும். சென்னை, கிழக்கு கடற்கரைச் சாலை போன்ற இடங்களில் பெரிய வீடுகளில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. இதற்காக பெரிய அளவில் வீடு செட் போட்டும் படமாக்கி உள்ளனர். விவேக் பிரசன்னா,சாக்ஷி அகர்வால், டேனியல் அன்னி போப், பிரவீன், அர்ஜுனன், ஸ்வயம், சஹானா, ஜமுனா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செங்கோட்டை காா் குண்டுவெடிப்பு: நஸீா் பிலாலை மேலும் 7 நாள்கள் விசாரிக்க என்ஐஏவுக்கு அனுமதி

தில்லியில் முதல் கட்டமாக 10,000 வகுப்பறைகளில் காற்று சுத்திகரிப்பான்கள் நிறுவப்படும்: அமைச்சா் ஆஷிஷ் சூட் அறிவிப்பு

தில்லியில் மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் இல்லாத சுமாா் 2800 வாகனங்களுக்கு எரிபொருள் மறுப்பு

புத்தொழில் திட்டத்தில் மாவட்டத்தின் முதல் கிராமமாக ‘ஆசனூா்’ தோ்வு

காஜிப்பூா் குப்பைக் கிடங்கில் கசிந்த அடா் புகை

SCROLL FOR NEXT