உழைப்பாளர் தினம் 
ஞாயிறு கொண்டாட்டம்

உழைப்பாளர் தினம்

நம்பிக்கையூட்டும் படமாக உருவாகியிருக்கிறது "உழைப்பாளர் தினம்'. சென்ற வாரம் சிங்கப்பூர் கார்னிவல் சினிமாஸில் இப்படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது.

DIN

நம்பிக்கையூட்டும் படமாக உருவாகியிருக்கிறது "உழைப்பாளர் தினம்'. சென்ற வாரம் சிங்கப்பூர் கார்னிவல் சினிமாஸில் இப்படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. முதல் பாதியில் காமெடி, காதல் என்று பரபரப்புடன் சென்றது.

இரண்டாவது பாதியில் வெளிநாட்டு தொழிலாளர்களின் வாழ்வியலை அழுத்தத்துடன் கனமான காட்சிப்படுத்துதலில் சென்ற கதை கிளைமாக்ஸ் யாரும் எதிர்பார்க்காத அழகான திருப்பத்துடன் நிறைவடைந்தது என்கிறது படக்குழு. இது குறித்து இயக்குநர் சந்தோஷ் நம்பிராஜன் பேசும் போது... ""படம் நிறைவடைந்ததும் அனைவரும் பாராட்டினார்கள். அதில் உச்ச பட்சமாக ஒரு வெளிநாட்டு தொழிலாளர், நடிகரும் இணை தயாரிப்பாளருமான சிங்கப்பூர் துரைராஜின் கைகளைப் பிடித்துக் கொண்டு "எங்களுடைய வெளிநாட்டு வாழ்க்கையை எங்களுடைய குடும்பங்களுக்கு கூட தெரியாது, எங்களுடைய கஷ்டம் எங்களுடைய இருக்கட்டும் எதற்கு குடும்பத்திற்கு என்று சொல்ல மாட்டோம். ஆனால், எங்களுடைய வாழ்க்கையை மிக அழகாக காட்சிப்படுத்த அதனை கமர்ஷியல் உடன் சிரிக்க வைத்து எங்களையும் சிந்திக்க வைத்தது படம் என்று ஆனந்த கண்ணீருடன் நன்றி பாராட்டியுள்ளார்.

மற்றொரு வெளிநாட்டு தொழிலாளர் "என்றாவது ஒருநாள் எனது சொந்த ஊரில் வெற்றிகரமாக சென்று நிரந்தரமாக வாழ்வேன் அதற்கு "உழைப்பாளர் தினம்' படம் தான் எனக்கு உத்வேகம்' என்றார். இதனைத் தொடர்ந்து அமெரிக்க மற்றும் துபாயில் சிறப்பு காட்சி திரையிட படக் குழுவினர் முயற்சிகள் மேற்கொண்டு உள்ளனர். ஆகஸ்ட் மாதம் திரைக்கு வர உள்ளது. வெளிநாட்டு தொழிலாளர்கள் மட்டுமல்லாமல் அனைத்து தொழிலாளர்களும் இந்த உழைப்பாளர் தினம் படத்தைக் கொண்டாடுவார்கள் என்கிறார் சந்தோஷ் நம்பிராஜன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT