உலகின் பிரபலமான விளையாட்டு வீரர்கள் பங்குகொள்ளும் போட்டிகளில் சில மறக்க முடியாததாக அமைந்து
விடும். பின்னாளில் அந்தப் போட்டிகளில் அவர்கள் பயன்படுத்திய பொருள்கள் பெரிய அளவில் பேசப்படும். இந்தப் பொருள்களை வீரர்கள், தொண்டு நிறுவனத்தினருக்கு அன்பளிப்பாக அளிப்பர். இவற்றை தொண்டு நிறுவனத்தினர் ஏலம்விட்டு தாங்கள் சமூகச் சேவைகளுக்காகப் பயன்படுத்துவர். அந்த வகையில் சில பிரபலங்களின் பொருள்களின் மூலம் கிடைத்த ஏலத்தொகை.
முகம்மது அலி: 1975-ஆம் ஆண்டில் மணிலாவில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் அப்போதைய சாம்பியன் ஜோ பிரேஷரை யாரும் எதிர்பாராவிதமாகத் தோற்கடித்தவர் முகம்மது அலி. அப்போது அவர் பயன்படுத்திய டிரவுசர் (டிரங்க்ஸ்) அண்மையில் ஏலத்துக்கு வந்தது. அதன் விலை இந்திய மதிப்பில் ரூ.31 கோடி (3.8 மில்லியன் டாலர்).
ரோஜர் பெடரர்: டென்னிஸ் போட்டிகளில் வெற்றிகளைக் குவித்தார். இதில், 2007-இல் நடைபெற்ற விம்பிள்டன் சாம்பியன்ஷிப் போட்டியும், 2009-இல் நடைபெற்ற பிரெஞ்ச் ஒபன் டென்னிஸ் போட்டியும் குறிப்பிடத்தக்கவை. இவ்விரு போட்டிகளில் அவர் பயன்
படுத்திய உடைகள், ராக்கெட் பேட் ஏலத்துக்கு வந்தபோது, ரூ.1.95 கோடி கிடைத்தது. இதுமட்டுமல்ல, ஒரு தொண்டு நிறுவனம் உதவி கேட்டபோது, தான் அதுவரை பயன்படுத்திய 300 பொருள்களை ஏலத்துக்கு அளித்தார். இதன்மூலம் அந்தத் தொண்டு நிறுவனத்துக்கு ரூ.45 கோடி கிடைத்தது.
மைக்கல் ஜோர்டன்: கூடைப்பந்து வீரரான இவர், சிகாகோ புல்ஸ் அணிக்காக விளையாடினார். இவர் 1991-98-ஆம் ஆண்டுகளில் ஆறு முறை என்.பி.ஏ. சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெற்றி பெற உதவியாக இருந்தார். இதற்கு பரிசாக ஆறு ஏர் ஜோர்டான் ஷூக்கள் கிடைத்தன. அவற்றைப் பயன்படுத்தி தொடர்ந்து ஆடினார். நைந்துகூட போயின. . இருந்தும், 2024-ஆம் ஆண்டு பிப்ரவரியில் அவை ஏலத்துக்கு வந்தபோது, ரூ.66 கோடிக்கு ஏலம் போயின.
மெஸ்ஸி: கால்பந்து வீரர். 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பிரான்ஸை அர்ஜென்டினா தோற்கடித்தது. அவற்றுக்காக மெஸ்லி பயன்படுத்திய ஆறு ஜெர்சிக்கள் 2023-ஆம் ஆண்டு நவம்பரில் ஏலம் விடப்பட்டது. இதற்கு ரூ.65 கோடி கிடைத்தது.
ஷான் வார்னே: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்காக, 15 ஆண்டுகள் விளையாடி 145 டெஸ்டுகளில் களம் இறங்கிôர். அவர் பயன்படுத்திய பச்சை வண்ணத் தொப்பி மிகவும் பிரபலமானது.
2020-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் புதர்கள் மண்டியுள்ள பகுதிகளில் பெரிய தீ விபத்து ஏற்பட்டது.இதனால் பாதிக்கப்பட்டவற்றை மறுசீரமைப்பு செய்ய தொண்டு நிறுவனம் ஒன்று முன்வந்தது. அப்போது அந்தத் தொண்டு நிறுவனத்துக்கு ஷான் வார்னே தொப்பியை அளித்தார். இந்தத் தொப்பி ரூ.5 கோடிக்கு ஏலம் போனது.
மரடோனா: 1986-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்துப் போட்டி அழியாப் புகழை தந்தது. இவர் அடித்த கோல் பிரச்னைக்குரியதாகப் பேசப்பட்டது. அந்தச் சமயம் அவர் பயன்படுத்திய ஜெர்சி, 2022-ஆம் ஆண்டில் ஏலத்துக்கு வந்தது. 77 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது.
-ராஜி ராதா, பெங்களூரு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.