அதிர்ஷ்டசாலி 
ஞாயிறு கொண்டாட்டம்

மாதவனின் "அதிர்ஷ்டசாலி"

தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார் மாதவன்.

DIN

தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார் மாதவன். நீண்ட இடைவெளிக்குப் பின் இவர் நடிப்பில் வந்த அனைத்து படங்களுமே உச்சத்தை தொட்டன. நடிப்பு மட்டுமின்றி இயக்கத்திலும் கவனம் செலுத்திய மாதவன் தற்போது "அதிர்ஷ்டசாலி" என்ற படத்தில் நடிக்கிறார். " யாரடி நீ மோகினி", "திருச்சிற்றம்பலம்" உள்ளிட்ட படங்களை இயக்கிய மித்ரன் ஆர். ஜவஹர் இப்படத்தை இயக்குகிறார்.

"அதிர்ஷ்டசாலி" படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக சமீபத்தில் நிறைவு பெற்றது. மேலும், இந்தப் படத்தின் இறுதி கட்ட வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக் குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர் சமூக வலைதளத்தில் பலருடைய கவனத்தை ஈர்த்து வைரலாகி உள்ளது.

ஃபேண்டசி டிராமா கதையம்சம் கொண்டு உருவாகும் அதிர்ஷ்டசாலி திரைப்படத்தை ஏ.ஏ. மீடியா கார்ப்பரேஷன் நிறுவனம் சார்பாக சர்மிளா, ரேகா விக்கி, மனோஜ் முல்கி ஆகியோர் பிரமாண்டமாக தயாரித்துள்ளார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு ஸ்காட்லாந்தின் புகழ்பெற்ற பகுதிகளில் நடைபெற்றுள்ளது. அதன்படி ஃபோர்த் ப்ரிட்ஜ், எடின்பர்க், டீன் வில்லேஜ் மற்றும் விக்டோரியா ஸ்டிரீட் என உலக புகழ்பெற்ற ஹாரி பாட்டர் படங்கள் படமாக்கப்பட்ட தளங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது.

மாதவன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தில் மடோனா செபஸ்டியன், ராதிகா சரத்குமார், சாய் தன்ஷிகா, ஜெகன், நிரூப் என்.கே., உபசனா ஆர்.சி, மாத்யூ வர்கீஸ், உதய் மகேஷ், கே.எஸ்.ஜி. வெங்கடேஷ், ரவி பிரகாஷ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்திற்கு கார்த்திக் முத்துகுமார் ஒளிப்பதிவு செய்ய, எம். தியாகராஜன் படத்தொகுப்பு செய்கிறார். விரைவில் படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குடிபோதையில் அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! பாளையங்கோட்டையில் பரபரப்பு!

ரஷியாவிடமிருந்து இனி இந்தியா கச்சா எண்ணெய் வாங்கப்போவதில்லையாம்: டிரம்ப் தகவல்

வெண்ணிலவே... ரேஷ்மா பசுபுலேட்டி!

ரெட் ரோஸ்... சாக்‌ஷி அகர்வால்!

இனி நோயாளிகள் இல்லை, மருத்துவப் பயனாளிகள்: மு.க. ஸ்டாலின்

SCROLL FOR NEXT