ஞாயிறு கொண்டாட்டம்

வலிமை குன்றி இருக்கக் கூடாது...

'ஒருபக்கம் மென்மையான அகிம்சை, இன்னொரு பக்கம் அச்சுறுத்தும் அணுகுண்டு. இது என்ன முரண்பாடு?' என அப்துல் கலாமிடம் கேட்டவர்கள் உண்டு.

த.சீ.பாலு

'ஒருபக்கம் மென்மையான அகிம்சை, இன்னொரு பக்கம் அச்சுறுத்தும் அணுகுண்டு. இது என்ன முரண்பாடு?' என அப்துல் கலாமிடம் கேட்டவர்கள் உண்டு. அதற்கு அவர் அளித்த பதில் என்ன தெரியுமா?

'ஆறாயிரம் ஆண்டுகளை உள்ளடக்கியது இந்திய வரலாறு. ஆனால், இந்தியாவை இந்தியர்கள் ஆண்டது அறுநூறு ஆண்டுகள் மட்டுமே காரணம். நாம் வலிமை குன்றி இருந்ததால், நமது வளத்தை மற்றவர்கள் அபகரித்தனர்.

வலிமைதான் வலிமையை மதிக்கும். நம்மைச் சுற்றி பத்தாயிரம் அணுகுண்டுகளுடன் ரஷியாவும், அமெரிக்காவும் மற்ற நாடுகளும் இருக்கின்றன. அப்போது நாம் மட்டும் கையைக் கட்டிக் கொண்டு தவம் செய்ய முடியாது.

அதற்காகதான் நமது வலிமையை நிரூபிக்க அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டது. அதனால், இந்தியாவின் மதிப்பு பெரிய அளவில் உயர்ந்தது.

அதே நேரத்தில் நாம்தான் முதல்முதலாக, 'அணுகுண்டைப் பயன்படுத்த மாட்டோம்' என்ற கொள்கையை வகுத்துகொண்டு, உலகத்துக்கே முன்னுதாரணமாகவும் விளங்குகிறோம்' என்று அப்துல் கலாம் அற்புதமாகப் பதில் அளித்தார்.

அவருடைய சிந்தனைத் தோட்டத்தில் பூத்த சிறந்த மலர்களாக இந்தப் பேச்சு அமைந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விமானத்தில் கரப்பான் பூச்சிகள்: மன்னிப்பு கேட்ட ஏர் இந்தியா!

புதிய இணையத் தொடரில் சைத்ரா ரெட்டி!

ஓடிபி விவகாரம்- திமுகவின் வழக்கு தள்ளுபடி

டிரம்ப் விதித்த 25% வரி... ஆடைத் தயாரிப்புத் துறையில் 20 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம்!

காணாமல் போன 3 சிறுவர்கள் சடலமாக மீட்பு: உ.பி.யில் அதிர்ச்சி!

SCROLL FOR NEXT