மறைமுகம் 
ஞாயிறு கொண்டாட்டம்

உறவுகளுக்குள் சிக்கல்

அபிகா ஆர்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் 'மறைமுகம்'.

DIN

அபிகா ஆர்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் 'மறைமுகம்'. கதாநாயகனாகவும் நிஷித்தா நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக தனுஜா நடிக்கிறார். பாவா லஷ்மணன், நந்தா சரவணன்.

'பரியேறும் பெருமாள்' வெங்கடேஷ், பிரியதர்ஷினி தேவி, கண்ணன், ஜீவகன், உமேரா பேகம் உள்ளிட்டோர் கதையின் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கதை, திரைக்கதை, வசனம் மற்றும் பாடல்களை எழுதி இப்படத்தை இயக்குகிறார் ஏ.பி. ஷர்வின். படம் குறித்து இயக்குநர் பேசும் போது....

'ஆக்ஷன், த்ரில்லரில் இந்தப் படம் முக்கிய இடம் பிடிக்கும். ஒரு குற்றமும், அந்த குற்றத்தை செய்ய தூண்டக் கூடிய அம்சங்களும்தான் இதன் ஆதாரம். இங்கே குற்றம் என்பது நம்பிக்கை துரோகம்.

அந்த துரோகத்தின் மூலம் எங்கே ஆரம்பிக்கிறது. அதன் விளைவுகள் என்ன என்பதுதான் இதன் பேசு பொருள். எல்லாவற்றையும் தீர்மானிக்கிற சக்தி உள்ள மனிதனால் எவ்வளவு காசு, பணம் கொடுத்தாலும் சூழ்நிலையை மட்டும் தனக்கு ஏற்றவாறு உருவாக்கி விட முடியாது.

இப்போதுள்ள வாழ்க்கை அனுதினமும் சவால்தான். அதுவும் ஆண், பெண் உறவுகளுக்குள் உள்ள சிக்கல்கள் ஏராளம். குறிப்பாக காதல். எண்ணங்கள் பொருந்திப் போனால்தான் எந்த விஷயமும் ஈடேறும். இது காதலுக்கு அப்படியே பொருந்தும்.

ஆனால் நாளடைவில் எல்லாவற்றிலும் சலிப்பு, பிரியமானவர்கள் மீது காட்டுகிற அன்பு அவர்களை சந்தோஷப்படுத்த இல்லை. என்னை நானே சந்தோஷப்படுத்திக் கொள்ளத்தான் என்ற நிலை உருவானால் அந்த வாழ்க்கை என்னவாகும். அப்படியோர் பாதையில்தான் இந்த கதை பயணமாகும்.'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகளிா் தொழில்நுட்பக் கல்லூரியில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

செண்டூரில் ஆடிப்பெருக்கு விழா: மயிலம் முருகனுக்கு தீா்த்தவாரி

கூட்டுறவும் நாட்டுயா்வும்!

மின்னணு பொருள்கள் விற்பனையகத்தில் தீ விபத்து

கோயில்களில் சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT