ஞாயிறு கொண்டாட்டம்

கார்கில்..

மயக்கும் யூனியன் பிரதேசமான லடாக்கில் உள்ள இரண்டாவது பெரிய நகரம் கார்கில்.

ஆர். ஆர்.

மயக்கும் யூனியன் பிரதேசமான லடாக்கில் உள்ள இரண்டாவது பெரிய நகரம் கார்கில். 1999-இல் நடைபெற்ற கார்கில் போரின்போது, இந்திய வீரர்களின் வீரச் சாதனைகளுக்கு பெயர் பெற்ற இடம். ட்ராஸ் மாவட்டத்தில் உள்ள இந்த நகர் ஏப்ரல் முதல் ஜூன் மாதங்கள் வரையில் ரசிக்கத்தக்க வகையில் இருக்கும்.

'கார்' என்றால் கோட்டை. இப்போதும் இங்கு பாழடைந்த நிலையில் உள்ள கோட்டைகளைக் காணலாம். 'ர்கில்' என்றால் மையம் எனப் பொருள். ஸ்ரீநகரில் இருந்து 205 கி.மீ. சுரு என்ற ஆற்றின் கரையில் உள்ளது.

ஒருகாலத்தில் தெற்கு ஆசியாவுக்கும், மத்திய ஆசியாவுக்கும் வர்த்தகப் பாதையின் இடையில் இருந்தது. ' கார்கைல்' என்றே பலரும் அழைக்கின்றனர்.

8,780 மீட்டர் உயரத்தில் உள்ளது இந்த நகரின் வித்தியாசமான நிலப்பரப்புகள், வளமான, கலாசாரப் பாரம்பரியம், எளிமை அனைவரையும் கவர்ந்திழுக்கிறது. மயக்கும் ஆரிய பள்ளத்தாக்கில் மறைந்திருக்கும் ரத்தினங்களாக, தா, ஹனு, கர்கோன், டார்சிக் ஆகிய நான்கு கிராமங்கள் உள்ளன.

இங்கு வசிப்போர் விவசாயம், வர்த்தகம் செய்வோர்தான். மல்பேரி பழ மரங்கள் பல இடங்களில் காணப்படுகின்றன. பாதாமி பழங்கள்,ப்ளட்லைன் பழம், மல்பெரி, பிளாக் பெர்ரி என பல பழங்கள் பண்ணைகளில் விளைகின்றன. பார்க்க வேண்டிய முக்கிய இடங்கள் பல இங்குள்ளன.

மைத்ரி புத்தர் சிலை: முல்பெர்க் மடாலயம் சார்ந்து இந்த புத்தரை மலையின் உச்சியில் 9 மீட்டர் உயரத்தில் காணலாம். அமர்ந்த கோலத்தில் ஒரு கை ஆசிர்வாதம் செய்ய,மற்றொரு

கை தியான முத்திரை காட்டியபடி உள்ளது. எட்டாம் நூற்றாண்டு சார்ந்ததாக கூறப்படும் பல வண்ண புத்தரை காண கண் கோடி வேண்டும்.

ஹோம் போடிங் லா பாஸ் அல்லது பாஸ்: 5608 மீட்டர் உயரத்தில் இந்த கணவாய் உள்ளது. வழிநெடுக கண்கொள்ளாக் காட்சிகள் கண்களை சொக்க வைக்கும்.

முல்பேக் மடாலயம்: குனறின் மீது உள்ள மடாலயம். இதனுள் புத்தமத கதைகள் அழகிய ஓவியங்களாக உள்ளன.

ஷார்கோல் மடாலயம்: இது ஒரு குகை மடாலயம்.

இதுதவிர கார்கில் யுத்த நினைவாலயம் உள்ளது. கண்களை கவர்ந்து இழுக்க சுறு பள்ளதாக்கை பார்க்கச் செல்லலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மிதுன ராசிக்கு மனகுழப்பம் தீரும்: தினப்பலன்கள்!

உற்பத்தித் துறையில் 16 மாதங்கள் காணாத வளா்ச்சி

மாமல்லபுரத்தில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி

ஆடி வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற 80 சதவீத மாணவா்கள் உயா்கல்வியில் சோ்க்கை

SCROLL FOR NEXT