Picasa
ஞாயிறு கொண்டாட்டம்

லட்சியம் நிச்சயம் வெல்லும்...!

விளையாட்டிலிருந்து வீராங்கனைகள் வெள்ளித்திரை, சின்னத்திரைகளில் பலர் நடிக்க வந்திருக்கின்றனர்.

சக்ரவர்த்தி

விளையாட்டிலிருந்து வீராங்கனைகள் வெள்ளித்திரை, சின்னத்திரைகளில் பலர் நடிக்க வந்திருக்கின்றனர். மாறாக, ஸையாமி வெள்ளித்திரையிலிருந்து தடகள உலகத்துக்குச் சென்றுள்ளார். 'அயர்ன்மேன் 70.3' என்ற போட்டியில் வென்ற முதல் இந்திய நடிகையான நிலையில், 'தனது லட்சியம் நிறைவேறியது'' என்கிறார்.

இவர் அண்மையில் ஜெர்மனியில் நடைபெற்ற உலகப் புகழ்பெற்ற 'அயர்ன்மேன் 70.3' டிரையத்லானை முடித்த முதல் இந்திய நடிகை' என்ற வரலாற்றைப் பெற்றுள்ளார். போட்டியில் பங்கேற்க அவரது ஆர்வம், அர்ப்பணிப்பு, விடாமுயற்சியை மன தைரியத்தை எடுத்துகாட்டுகிறது.

'ஹாஃப் அயர்ன்மேன்' என்றும் அழைக்கப்படும் இந்த விளையாட்டு மிகவும் கடினமான சகிப்புத் தன்மை, பொறுமை தேவைப்படும் போட்டிப் பந்தயங்களில் ஒன்றாகும். உலகெங்கிலும் உள்ள சிறந்த விளையாட்டு வீரர்களைக் கூட இது சோதனைகளுக்கு உள்ளாக்கும். இந்தப் போட்டியில், 1.9 கி.மீ. நீச்சல், 90 கி.மீ. சைக்கிள் ஓட்டுதல், 21.1 கி.மீ. ஓட்டம் போன்ற மூன்று நிலைகளைக் கொண்டுள்ளது.

இந்தப் போட்டியில் கலந்து கொள்ள ஸையாமிக்கு ஒரு ஆண்டு கால பயிற்சி தேவைப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் கூறியது:

'போட்டிக்காக முப்பத்து இரண்டு வயதில் உடல் வலியை பொருட்படுத்தாமல் தினமும் 12 முதல் 14 மணி நேரம் கடுமையான பயிற்சியை மேற்கொண்டேன். அதிகாலை மூன்றரை அணிக்கு பயிற்சியைத் தொடங்குவேன். பயிற்சி முடிந்ததும் நடிக்கவும் போகவேண்டும். பயிற்சி, நடிப்புக்கு நடுவில் எனது கனவை நிறைவேற்ற பல சிரமங்களைச் சகித்துக் கொள்ள வேண்டிவந்தது.

போட்டியில் கலந்து கொண்ட பலரும் இறுதிவரை தொடரவில்லை. முடிவில் நான் நினைத்ததைச் சாதித்துவிட்டேன். இந்தப் போட்டியில் வெற்றிக்கரமாக பங்கு பெற்று இறுதிக் கோட்டைக் கடந்து பதக்கத்தைப் பெறுவது என் லட்சியமாக இருந்தது.

அதை நிறைவேற்றிவிட்டேன். பதக்கம் பெற்றது எனது வாழ்வின் பெருமையான தருணங்களில் ஒன்றாகும். அதனால் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். வானத்தில் பறக்கிறேன்' என்கிறார் ஸையாமி கெர்.

'சோக்ட்' , 'கூமர்', 'ஷர்மாஜி கி பேட்டி' போன்ற ஹிந்தி படங்களிலும் சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார் ஸையாமி. இவருக்கு முன்னர் 'அயர்ன்மேன் 70.3' டிரையத்லானில் பங்கேற்ற ஒரே இந்திய நடிகர் பிரபல மாடல் மிலிந்த் சோமன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் நோக்கி ஆகஸ்ட் 7-ல் அமைதிப் பேரணி!

சொல்லப் போனால்... பஹல்காமிலிருந்து லெவல் கிராசிங் வரை...

தமிழகத்துக்கு மின்-பேருந்துகள்: டாடா மோட்டாா்ஸ் ஒப்பந்தம்

அரையாண்டில் 5% சரிந்த வீடுகள் விற்பனை

மனகஷ்டம் நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT