முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

திரைக்கதிர்

'டிராகன்' பட வெற்றியின் மூலம் முன்னணி இயக்குநராகி விட்டார் அஸ்வத் மாரிமுத்து.

Updated On : 12 ஏப்ரல், 2025 at 6:45 PM
பகிர்:

'வீரன் தீரன் சூரன்' படத்தின் வெற்றி குறித்து பதிவு செய்துள்ளார் விக்ரம். பதிவில், ' எனது ரசிகர்களுக்குஉண்மைக்கு நெருக்கமான ஒரு படைப்பை தர வேண்டுமென நீண்ட நாள்களாக ஆசைப்பட்டேன். இயக்குநர் அருண்குமார் மூலம் அது நடந்தது. ரிலீஸ் நாளன்று எதிர்பாராமல் ஏற்பட்ட தடங்கல்களால், படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டது.

ஒரு படம் முதல் ஷோ வரவில்லை என்றாலே அந்தப்படம் ஓடாது என்பார்கள். எங்கள் படம் மாலைக்காட்சி தான் வந்தது. ஆனால் படம் பார்த்த ரசிகர்கள் தந்த வரவேற்பு மறக்க முடியாதது. என் ரசிகர்களுக்கு நன்றியைத் தவிர வேறெதுவும் சொல்லத் தோன்றவில்லை. என் மீதான உங்கள் அன்புக்கு நன்றி. உங்களுக்காக தொடர்ந்து நல்ல படங்கள் தருவேன். அனைவருக்கும் நன்றி.' என பதிவிட்டுள்ளார் விக்ரம்.

'டிராகன்' பட வெற்றியின் மூலம் முன்னணி இயக்குநராகி விட்டார் அஸ்வத் மாரிமுத்து. இப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 51'ஆவது படத்தை இயக்கவிருக்கிறார். சில நாள்களுக்கு முன்பு தனக்கு உதவி இயக்குநர்கள் வேண்டும். உதவி இயக்குநராக வாய்ப்பு தேடிக் கொண்டிருப்பவர்கள் தன்னிடம் சேர்வதற்கு விண்ணப்பங்களை அனுப்பலாம் எனப் பதிவிட்டிருந்தார்.

Advertisement

தனக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு எப்படியான தகுதிகள் இருக்க வேண்டும் என்பதை நகைச்சுவையான பாணியில் குறிப்பிட்டு பதிவு ஒன்றை அவர் போட்டிருந்தது சமூக வலைதளப் பக்கங்களில் வைரலானது. அதனைத் தொடர்ந்து பலரும் நகைச்சுவை பாணியில் பலரும் அவருக்கு பதிலளித்தனர். இப்போது அவரது மெயிலுக்கு 15 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்திருக்கிறது.

அல்லு அர்ஜுனின் பிறந்தநாளில் அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தின் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள். அல்லு அர்ஜுனும் 'புஷ்பா' படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு அட்லீ இயக்கும் இப்படத்தில் நடிக்கவிருக்கிறார்.

சுயாதீன பாடல்களின் மூலம் மக்களிடம் வரவேற்பைப் பெற்ற சாய் அபயங்கர் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார் எனக் கூறப்படுகிறது. ஆனால், அது தொடர்பான அதிகாரப்பூரவமான அறிவிப்பு வெளியாகவில்லை. அவென்சர்ஸ் ' என்ட் கேம், கேப்டன் மார்வெல்' போன்ற திரைப்படங்களுக்கு கிராபிக்ஸ் பணிகளை மேற்கொண்ட லோலா வி எப் எக்ஸ் நிறுவனத்தில் படத்திற்கான கிராபிக்ஸ் பணிகளை தொடங்கியிருக்கிறார்கள்.

சமீபத்தில் சர்ச்சையில் சிக்கிய 'சிறகடிக்க ஆசை' சீரியலில் நடித்து வரும் நடிகை ஸ்ருதி நாராயணன் தற்போது வெள்ளித்திரையில் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார். ரங்கராஜ், ஸ்ரீலேகா, டெல்லி கணேஷ், சாய் தீனா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மனோஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜோஸ் பிராங்களின் இசையமைத்திருக்கிறார்.

ஓ பி ஆர் பி புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஜெயபாரதி ரங்கராஜ் தயாரித்திருக்கிறார். 'இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய இயக்குநர் ரங்கராஜுக்கு நன்றி. படப்பிடிப்பு தளத்தில் என்னுடைய கதாபாத்திரத்திற்குரிய நடிப்பை சொல்லிக் கொடுத்து நடிக்க வைத்த இயக்குநருக்கு நன்றி. இப்படத்திற்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்' என்றார் ஸ்ருதி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments