மருது புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், சி. மோகன்ராஜ் எழுதி இயக்கும் படம் சாணி.
மருது பாண்டியன் கதாநாயகனாக அறிமுகமாகும் இப்படத்தின் துவக்க விழா பள்ளி மாணவிகள் முன்னிலையாய் தொடங்கியது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம், கருங்குழி கிராமத்தில் உள்ள சி. எஸ். ஐ. பெண்கள் பள்ளியில் நடைபெற்ற இந்த நிகழ்வில் டாக்டர் அம்பேத்கர், பெரியார் ஈ.வெ.ரா., டாக்டர் முத்துலட்சுமி, பெருந்தலைவர் காமராஜர் மற்றும் ஏ. பி. ஜெ. அப்துல்கலாம் ஆகியோரின் புகைப்படங்களை முன்னிலையாக வைத்து மிகுந்த மரியாதையுடன் படத்துவக்கவிழா நடத்தப்பட்டது. இந்த விழாவில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் நேரில் கலந்துகொண்டனர்.
மேலும், அனைத்து மாணவிகளுக்கும் இனிப்புகள், நோட்டு புத்தகம், பேனா மற்றும் புத்தகப் பைகள் வழங்கப்பட்டு, சமூகக் கட்டுப்பாட்டுடன் கல்விக்கும் கலைக்கும் இடையே பாலம் அமைக்கும் முயற்சியாக இந்த நிகழ்வு அமைந்தது.
இயக்குநர் சி. மோகன்ராஜ், தான் இன்றும் இந்த நிலைக்கு வர முதல் காரணம் கல்வி மட்டுமே. கல்வி இல்லையெனில் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்த என்னால் எழுதவோ, படிக்கவோ, சிந்திக்கவோ சாத்தியமில்லை என்பதனால் தனது முதல் படத்தை பள்ளியில் கல்விக்காக போராடிய தலைவர்களின் முன்னிலையில் மாணவிகளின் ஆசீர்வாதத்துடன் திரைப்பட பயணத்தை தொடங்கவேண்டும் என்ற எனது பல நாள் கனவு இன்று நிறைவேறியிருக்கிறது.
இதற்கு உறு துனையாக இருந்த அனைவருக்கும் நன்றி. கலையின் ஒரு வடிவம் தான் சினிமா . நல்ல திரைப்படங்கள் மாணவர்களுக்கு பாடமாகக்கூட அமைந்திருக்கின்றன. பள்ளிக்கூடத்தில் ஒரு திரைப்படத்தின் துவக்கவிழாவை துவங்கியிருப்பதிலிருந்து புரிந்துகொள்ளலாம் இந்தத் திரைப்படம் எதை பேசவேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெறவிருக்கிறது' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.