ஞாயிறு கொண்டாட்டம்

கிராமத்துப் பின்னணியில்...

கெளரிசங்கர் ரவிச்சந்திரன் மற்றும் ஆனந்த் பொன்னுசாமி தயாரிப்பில் உருவாகி வரும் படம் "கடுக்கா'.

தினமணி செய்திச் சேவை

கெளரிசங்கர் ரவிச்சந்திரன் மற்றும் ஆனந்த் பொன்னுசாமி தயாரிப்பில் உருவாகி வரும் படம் "கடுக்கா'. இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் முருகராசு. சமூக அக்கறையுடன், கிராமிய பின்னணியில் ஒரு கமர்ஷியல் படைப்பாக இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. விஜய் கெளரிஷ், ஸ்மேஹா, ஆதர்ஷ் மதிகாந்த், மஞ்சுநாதன், மணிமேகலை, சுதா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

படம் குறித்து இயக்குநர் பேசும்போது, 'வரம்பு மீறிய காதல், காமம், பெற்றோர்களை ஏமாற்றுவது, பொய் சொல்லுவது... இன்னும் இன்ன பிற மீறல்களைத்தான் பல சினிமாக்கள் அர்த்தப்படுத்தி வந்திருக்கின்றன. இது அது மாதிரி இல்லாமல், வேறொரு மீட்டுருவாக்கத்தில் நான் எழுதிய கதை. நாம் எல்லோருமே கிராமத்தின் பிள்ளைகள். எல்லோருக்கும் கிராமத்து வாழ்க்கைதான் பூர்விகம்.

இப்போது சென்னை, மலேசியா என வாழ்க்கை மாறி மாறிப் பயணிக்கிறது. ஆனாலும், எப்போதைக்குமான மனசு அந்தப் பள்ளி வாழ்க்கையிலேயே சிலாகிக்க விரும்புகிறது. சக தோழர்கள், ஆசிரியர்கள், அந்த மர நிழல், குளம், ஆறு என எதையும் மறக்க மறுக்கிறது மனசு. ஆயிரங்களில் இருந்து லட்சங்களுக்கு மாறின வாழ்க்கை கிடைத்தாலும், இன்னொரு முறை அந்த வாழ்க்கையை வாழவே முடியாது.

வெற்றிடத்தைக் காற்று நிரப்பும் என்பது மாதிரி, முகத்தால்... குரல்களால்... செயல்களால்... சாயல்களால்தான் நம் பிரிவுகளையும் பிரியங்களையும் நிரப்பிக் கொண்டே இருக்கிறோம். யாராவது வந்து யாருடைய இடத்தையேனும் தங்கள் சாயல்களால் இட்டு நிரப்பிக் கொண்டே இருக்கிறார்கள். இதுதான் இந்தக் கதைக்கான பாதிப்பு. இதனால் இது வித்தியாசப்படும்'' என்றார்.

எல்லோருக்கும் கிராமத்து வாழ்க்கைதான் பூர்விகம். இப்போது சென்னை, மலேசியா என வாழ்க்கை மாறி மாறிப் பயணிக்கிறது. ஆனாலும், எப்போதைக்குமான மனசு அந்தப் பள்ளி வாழ்க்கையிலேயே சிலாகிக்க விரும்புகிறது. சக தோழர்கள், ஆசிரியர்கள், அந்த மர நிழல், குளம், ஆறு என எதையும் மறக்க மறுக்கிறது மனசு. ஆயிரங்களில் இருந்து லட்சங்களுக்கு மாறின வாழ்க்கை கிடைத்தாலும், இன்னொரு முறை அந்த வாழ்க்கையை வாழவே முடியாது.

வெற்றிடத்தைக் காற்று நிரப்பும் என்பது மாதிரி, முகத்தால்... குரல்களால்... செயல்களால்... சாயல்களால்தான் நம் பிரிவுகளையும் பிரியங்களையும் நிரப்பிக் கொண்டே இருக்கிறோம். யாராவது வந்து யாருடைய இடத்தையேனும் தங்கள் சாயல்களால் இட்டு நிரப்பிக் கொண்டே இருக்கிறார்கள். இதுதான் இந்தக் கதைக்கான பாதிப்பு. இதனால் இது வித்தியாசப்படும்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரதட்சிணைக் கொடுமை: மாமியார் - கணவர் சேர்ந்து பெண்ணை எரித்துக் கொன்ற கொடூரம்!

காலை உணவுத் திட்டத்தை விரிவாக்கம் செய்யும்போது குழந்தைகளின் வயிறு நிறைகிறது: முதல்வர்

சொல்லப் போனால்... புள்ளிகளும் கோடுகளும்!

எல் சால்வடாரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

வீடு வாங்கும் யோகம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT