“ஆண்டுகள் எத்தனை ஆனாலும், தமிழ்நாட்டை அண்ணாதான் ஆள்கிறார்” - முதல்வர் ஸ்டாலின்!
“ஆண்டுகள் எத்தனை ஆனாலும், தமிழ்நாட்டை அண்ணாதான் ஆள்கிறார்” என முதல்வர் ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளதைப் பற்றி...
“ஆண்டுகள் எத்தனை ஆனாலும், தமிழ்நாட்டை அண்ணாதான் ஆள்கிறார்” என அவரது நினைவு நாளில் அவரை நினைவுகூர்ந்து முதல்வர் ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
முன்னாள் முதல்வர் அண்ணாவின் நினைவு நாள் இன்று (பிப். 3) தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி திமுக, அதிமுகவினர், அரசியல் கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோர் அவரது உருவச்சிலை, புகைப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். மேலும், அண்ணாவின் நினைவு நாளில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அண்ணாவின் புகழை நினைவுகூரும் விதமாக திமுக தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியுள்ளார்.
Advertisement
Advertisement
அந்தப் பதிவில், “பேரறிஞர் அண்ணா தமிழர்களின் மனசாட்சி! நினைவுநாளில் மட்டுமல்ல, ஒவ்வொரு நாளும் அண்ணனை நினைக்கும் நாள்தான் எங்களுக்கு! அண்ணா சாலை, அண்ணா சிலைகள், அண்ணா மேம்பாலம், அண்ணா நூலகம், அண்ணா பேருந்து நிலையங்கள் என அண்ணா பெயர்சூட்டிய தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் அவரே நிறைந்திருக்கும்படி செய்தது திமுக அரசு.
மொழித் திணிப்பு - பண்பாட்டுத் திணிப்பு - நிதி நெருக்கடி என்றெல்லாம் வஞ்சகங்களைச் செய்துகொண்டு, துரோகிகளையெல்லாம் துணைக்கு அழைத்துக் கொண்டு வந்தாலும், பா.ஜ.க. அரசின் ஆணவத்துக்கும் ஆதிக்கத்துக்கும் அண்ணாவின் தமிழ்நாட்டில் GetOut-தான்! ஆண்டுகள் எத்தனை ஆனாலும், தமிழ்நாட்டை அண்ணாதான் ஆள்கிறார்!” எனப் பதிவிட்டுள்ளார்.
"No matter how many years pass, it is Anna who rules Tamil Nadu," Chief Minister Stalin said, paying tribute to him on Anna's death anniversary.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.