FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

இன்றைய ஜூலை 31 செய்திகள் - நேரலை!

முக்கிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள தினமணியுடன் இணைந்திருங்கள்...

Updated On : 31 ஜூலை 2026, 10:59 am IST
முதல்வர் சி. ஜோசப் விஜய் - டிஐபிஆர்
பகிர்:
Updated On : 31 ஜூலை 2026, 10:59 am IST

ராகுல் நாளை சென்னை வருகை

மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி சனிக்கிழமை ஒருநாள் பயணமாக சென்னை வருகிறார்.

Updated On : 31 ஜூலை 2026, 10:59 am IST

இஸ்ரேல் - காஸா போர்

இஸ்ரேல் - காஸா போருக்கு மத்தியில் ஹமாஸ் அமைப்பு ஆயுதங்களை ஒப்படைக்கவிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

Updated On : 31 ஜூலை 2026, 10:59 am IST

காங்கிரஸ் கேள்வி

பிரதமர் நிவாரண நிதி குறித்து அறிக்கை வெளியிட வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement

Advertisement

Updated On : 31 ஜூலை 2026, 10:59 am IST

ராகுல் எச்சரிக்கை

ஜென் ஸீ தலைமுறையினரை மிரட்டி அமைதிப்படுத்த முடியாது என்று மத்திய அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Updated On : 31 ஜூலை 2026, 10:59 am IST

தங்கம் விலை உயர்வு!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை சவரனுக்கு ரூ. 200 உயர்ந்து ரூ. 106,040-க்கு விற்பனையாகிறது.

Updated On : 31 ஜூலை 2026, 10:59 am IST

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்காத கர்நாடகம்

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டபோதிலும், தமிழகத்துக்கான தண்ணீரை கர்நாடகம் இன்று திறந்து விடவில்லை.

Updated On : 31 ஜூலை 2026, 10:59 am IST

10 பேர் மாயம்

வட பாகிஸ்தானில் உள்ள உலகின் மிக உயர்ந்த மலைகளில் ஒன்றான 'பிராட் பீக்' சிகரத்தில் பனிச்சரிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, நேபாளத்தைச் சேர்ந்த பிரபல மலையேற்ற வீரர் நிம்ஸ் டாய் தலைமையில் சென்ற சர்வதேச மலையேற்ற வீரர்கள் 10 பேர் காணாமல் போயுள்ளனர்.

Updated On : 31 ஜூலை 2026, 10:59 am IST

தோல்வியடைந்த அமித் ஷா

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் கோரிக்கையை ஆதரிப்பதாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் தீப்கே கூறியுள்ளார்.

Updated On : 31 ஜூலை 2026, 10:59 am IST

'திருடி'ப் பதுக்கிய எலி!

கர்நாடகத்தில் நகைக் கடையில் தங்க, வைர நகைகளை எலி திருடிய சம்பவம் சிசிடிவி காட்சிகளால் வெளிவந்துள்ளது.

Updated On : 31 ஜூலை 2026, 10:59 am IST

மின்சாரத்தில் தடங்கல்

தமிழகத்தில் மின்கட்டணம் தொடர்பாக பொதுமக்கள் பலரும் பாதிப்படைந்திருப்பதாக தவெக அரசு மீது திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

Updated On : 31 ஜூலை 2026, 10:59 am IST

ஜனநாயக விரோதம்!

திராவிடர் கழகத்தின் பரப்புரைக்கு காவல்துறை அனுமதி அளிக்க வேண்டும் என முதல்வர் விஜய்க்கு விசிக தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments