உ.பி. பேரவைத் தேர்தலில் சமாஜவாதி - காங்கிரஸ் கூட்டணி?
சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவுக்கு ராகுல் காந்தி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்திருப்பது பற்றி...
உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் சமாஜவாதி - காங்கிரஸ் கூட்டணியை உறுதி செய்யும் வகையில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.
சமாஜவாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் இன்று பிறந்த நாள் கொண்டாடி வருகிறார். அவருக்கு நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் தொண்டர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், அடுத்தாண்டு உ.பி.யில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் சமாஜவாதி - காங்கிரஸ் இணைந்து போட்டியிடுவதை உறுதி செய்யும் வகையில், ராகுல் காந்தி பிறந்த நாள் வாழ்த்தை பகிர்ந்துள்ளார்.
Advertisement
Advertisement
”அகிலேஷ் யாதவுக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள். பிற்படுத்தப்பட்டோர், தலித் மற்றும் பழங்குடியினரின் சமூக நீதிக்கான நமது அர்ப்பணிப்பை ஒன்றிணைந்து நிறைவேற்றுவோம்.
நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியான, வளமான வாழ்வுடனும் வாழ வாழ்த்துகிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டுள்ள வாழ்த்துப் பதிவில், “சமூக நீதி, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் ஜனநாயகம், அரசியலமைப்பு ஆகியவற்றை வலுப்படுத்தும் பயணத்தில் இணைந்து தொடர்ந்து முன்னேறுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் சமாஜவாதி - காங்கிரஸ் கூட்டணி உத்தரப் பிரதேசத்தில் 43 இடங்களைக் கைப்பற்றியது. சமாஜவாதி 33.84% மற்றும் காங்கிரஸ் 9.53% வாக்குகளைப் பெற்றது. வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலிலும் இந்த கூட்டணித் தொடரும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மொத்தமுள்ள 403 தொகுதிகளில் 80 முதல் 100 இடங்கள் வரை சமாஜவாதியிடம் இருந்து பெற காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
முன்னதாக நடைபெற்ற 2022 சட்டப்பேரவைத் தேர்தலில் இரு கட்சிகளும் தனித்துப் போட்டியிட்டன. சமாஜவாதி 101 தொகுதிகளிலும், காங்கிரஸ் 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.
Samajwadi-Congress alliance in UP Assembly elections?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.