FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

மகளிருக்கு ரூ. 50,000... உ.பி. தேர்தலில் வியூகத்தை கையில் எடுக்கும் பாஜக!

உத்தரப் பிரதேச பேரவைத் தேர்தலில், மகளிருக்கு ரூ. 50,000 வரையிலான உதவித்திட்டம் குறித்து ஆளும் பாஜக தீவிரமாகப் பரிசீலனை...

Updated On : 14 ஆகஸ்ட் 2026, 7:25 pm IST
பகிர்:

உத்தரப் பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மகளிருக்கு ரூ. 50,000 வரையிலான உதவித்திட்டம் குறித்து ஆளும் பாஜக தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது.

403 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்டுள்ள உத்தரப் பிரதேசத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

மக்களவைத் தேர்தலில் ஆளும் பாஜகவுக்கு அதிர்ச்சியளித்து 80 தொகுதிகளில் 37 தொகுதிகளைக் கைப்பற்றி அகிலேஷ் யாதவின் சமாஜவாதி கட்சி, சட்டப்பேரவைத் தேர்தலிலும் தங்களது கைகள் ஓங்கும் என்று எதிர்பார்த்து காங்கிரஸ் கூட்டணியை வலுப்படுத்த தீவிரம் காட்டி வருகிறது.

Advertisement

Advertisement

அதேவேளையில், யோகி தலைமையிலான ஆளும் பாஜக அரசு தங்களது வலிமையைக் காட்ட முனைப்பு காட்டி வருகின்றனர். மேலும், யோகி ஆதித்யநாத் மூன்றாவது முறையாக முதல்வராகத் தீவிரம் காட்டி வருகிறார்.

இந்த நிலையில், சமாஜ்வாதி கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.40,000 உதவித்தொகை வழங்கப்படும் என அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் அறிவித்திருப்பது, பாஜக - சமாஜவாதி இடையேயான போட்டியை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

இதற்கிடையில், நிதியுதவித் திட்டம் குறித்த விவரங்களை வெளியிடவில்லை என்றாலும், 2027 தேர்தலுக்கு முன்னதாக பெண்களுக்கு ரூ. 50,000 வரை வழங்க உ.பி. அரசு பரிசீலித்து வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முதல் தவணையாக ரூ. 20,000-மும், அதைத்தொடர்ந்து மூன்று தவணைகளாக ரூ.10,000-மும் வரவு வைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்திற்குப் பிறகு, இந்தியத் தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக வெளியிட்ட தரவுகளின்படி, உத்தரப் பிரதேசத்தில் 133,984,792 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 7,30,71,061 (54.54%) ஆண் வாக்காளர்களும், 6,09,09,525 (45.46%) பெண் வாக்காளர்களும், 4,206 (0.01%) மூன்றாம் பாலின வாக்காளர்களும் இருக்கின்றனர்.

பிகார், தில்லி, மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் தேர்தலுக்கு முன்னதாக பெண்களுக்கு அறிவிக்கப்பட்ட திட்டங்களைப் போலவே இந்தத் திட்டமும் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மத்தியப் பிரதேசம், ஹரியாணா, மகாராஷ்டிரம், பிகார், தில்லி உள்ளிட்ட சட்டப்பேரவைத் தேர்தல்களில், பெண்களுக்கு வழங்கப்படும் நிதியுதவித் திட்டம் பாஜகவின் வெற்றி வாய்ப்பை முற்றிலுமாக மாற்றியமைத்தது. மகாராஷ்டிரத்தில் லட்கி பஹின் திட்டம், பிகாரில் முக்கிய மந்திரி மகிளா ரோஜ்கர் யோஜனா, ஹரியாணாவில் தீன் தயாள் லடோ லக்‌ஷ்மி யோஜனா, மத்தியப் பிரதேசத்தில் முக்கிய மந்திரி லாட்லி பெஹ்னா யோஜனா ஆகியவை அனைத்துத் திட்டங்களும் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி வாய்ப்பைத் தேடித்தந்தது குறிப்பிடத்தக்கது.

summary

Ahead of the 2027 Uttar Pradesh assembly elections, the BJP government in the state is mulling over a financial assistance scheme for women, who constitute about 45% of the voters, on the lines of schemes announced by the Bihar, Delhi, Madhya Pradesh and Maharashtra governments, according to people familiar with the matter.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments