ஞாயிறு கொண்டாட்டம்

நடனங்களில் பெண்கள் பாதுகாப்பு

பெண்கள் பாதுகாப்புக்கான திட்டங்கள் குறித்தும், அவற்றை நெருக்கடியான நேரத்தில் பயன்படுத்திக் கொண்டு காப்பாற்றிக் கொள்வது குறித்தும் "சக்தி சீரிஸ்' என்ற பெயரில் சின்னஞ்சிறு காணொளிகளைத் தயாரித்து, "இன்ஸ்டாகிராம்' பகிர்ந்தார் லாஸ்யா நரசிம்மாச்சாரி.

எஸ். சந்திரமெளலி

பெண்கள் பாதுகாப்புக்கான திட்டங்கள் குறித்தும், அவற்றை நெருக்கடியான நேரத்தில் பயன்படுத்திக் கொண்டு காப்பாற்றிக் கொள்வது குறித்தும் "சக்தி சீரிஸ்' என்ற பெயரில் சின்னஞ்சிறு காணொளிகளைத் தயாரித்து, "இன்ஸ்டாகிராம்' உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிர்ந்துவருகிறார் லாஸ்யா நரசிம்மாச்சாரி. இந்தக் காணொலிகள் லட்சக்கணக்கான பார்வையாளர்களைக் கடந்திருக்கின்றன.

பரத நாட்டியம், குச்சுப்புடி நடனக் கலைஞரான இவர், 2013}ஆம் ஆண்டு முதல் "ரசோகம்' என்ற அமைப்பின் வாயிலாக, நடனம், யோகா உள்ளிட்ட பல கலைகளையும், திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளையும் கற்பித்து வருகிறார்.

அவரிடம் பேசியபோது:

'சமூகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு என்பது பெரும் கேள்விக்குறியாகி இருக்கிறது. பேருந்து பயணத்தின்போது அநாகரிகமான உரசலில் தொடங்கி, பாலியல் வன்முறை வரை வயது வித்தியாசமில்லாமல் கொடுமைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இத்தகைய தொல்லைகளிலிருந்து பெண்களைப் பாதுகாப்பதற்காக அரசு முன்னெச்சரிக்கையாக பலவேறு திட்டங்களையும் செயல்படுத்திவருகிறது.

நம் நாட்டின் கலை, கலாசாரத்தில் நாட்டியத்துக்கு முக்கியமான பங்கு உண்டு. ஒவ்வொரு பகுதியிலும், ஒவ்வொரு வகையான நாட்டியம் மிகவும் பிரபலமாக விளங்குகிறது.

நவராத்திரி கொண்டாட்டத்தில் இசை, நாட்டியத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறோம். கடந்த ஆண்டு நவராத்திரிக்கு முன்பாக, "என்ன செய்யலாம்' என்று நான் யோசித்தேன்.

ஏற்கெனவே மக்களவை உறுப்பினரும், கவிஞருமான தமிழச்சி தங்கப் பாண்டியனுடன் இணைந்து அவரது கவிதையின் அடிப்படையில் பரதநாட்டிய நிகழ்ச்சியை வடிவமைத்திருக்கிறேன். எனது எண்ணத்தை அவருடன் பகிர்ந்துகொண்டபோது, அவர் சொன்ன வழிகாட்டுதல்தான். "சக்தி சீரிஸ்' என்ற நாட்டியம் மூலமான பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு முயற்சி.

"பெண்கள் பாதுகாப்புக்காக அரசுகளின் முன்னெடுப்புகளைப் பயன்படுத்தி, இக்கட்டான நேரங்களில் பெண்கள் எப்படி தங்களைப் பாதுகாப்பது?' என்று விழிப்புணர்வை ஏற்படுத்துவது இந்தக் காணொளிகளின் நோக்கம்.

பரதநாட்டியம் மட்டுமில்லாமல், கதக், கதகளி, குச்சிப்புடி, ஓடிசி, மோகினி ஆட்டம், கட்டைக் கூத்து வரை பல்வேறு கலைஞர்களையும் ஒரு தளத்தில் ஒருங்கிணைத்து, பெண்கள் பாதுகாப்புத் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு அடையும் வகையில் காணொளிகளை உருவாக்கினோம். பெண்மையைப் போற்றுவதற்கு நவராத்திரியைவிட பொருத்தமான காலம் எது? அந்தச் சமயத்தில் விழிப்புணர்வுப் பிரசாரம் செய்வதே நல்ல முயற்சியாகும்.

"காவலன்' என்ற செயலியின் வாயிலாக, அபாய நேரத்தில் இருக்கும் பெண்கள் கைப்பேசியில் உள்ள பொத்தானை அழுத்தினால், காவல் துறையினர் உடனடியாக செயலில் இறங்கி, காப்பாற்றுவார்கள். கட்டைக் கூத்து நடனம் மூலமாக இந்த செய்தி சொல்லப்பட்டுள்ளது.

கட்டைக் கூத்துக் கலைஞர்கள் தங்கள் முகத்தில் சிவப்பாக மிகப் பெரிய குங்குமப் பொட்டு வைத்துகொள்வார்கள், ஆபத்தான நேரத்தில் பொத்தானை அழுத்த வேண்டும் என்று சிவப்பு குங்குமப் பொட்டின் வாயிலாகச் சொல்லி இருக்கிறோம்.

குச்சிப்புடி நடனக் கலைஞர்கள் தாம்பாளத்தின் மீது நின்று சாமர்த்தியமாகச் சமாளித்து நடனம் ஆடுவதைப் பார்த்திருக்கிறோம். அதன்படி, பெண்கள் பணியிடங்களில் வேலையையும் பார்த்து கொண்டு, பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் என்ற செய்தியை குச்சிப்புடி நாட்டியக் கலைஞர் மூலமாகச் சொல்லப்பட்டுள்ளது.

குடும்ப வன்முறை பற்றிய விழிப்புணர்வுக்காக, கதக் நாட்டியத்தைப் பயன்படுத்தி இருக்கிறோம்.

பணிபுரியும் பெண்களுக்கான "தோழி' உழைக்கும் மகளிர் விடுதி' குறித்தும் காணொலி உள்ளது. இசைக் கலைஞர்கள், நாட்டியக் கலைஞர்கள், இசையமைப்பாளர்கள், நடிகர்கள், நடிகையர் என சுமார் பத்துக்கும் மேற்பட்டோர் ஒருங்கிணைந்து பங்கேற்க முப்பது விநாடிகள் முதல் அறுபது விநாடிகள் கொண்ட ஒன்பது காணொளிகளை உருவாக்கி இருக்கிறோம்.

நவராத்திரியின்போது தினம் ஒன்றாக, இன்ஸ்டாகிராம் மூலமாக இந்தக் காணொளிகளை வெளியிட்டபோது நல்ல வரவேற்பு கிடைத்தது. இது எங்களுக்கு பெரும் ஊக்கத்தையும், உற்சாகத்தையும் அளித்தது.

இதுவரை அந்தக் காணொளிகளை மூன்றரை லட்சம் பேர் பார்த்திருக்கிறார்கள். இவற்றில் கிடைத்தத் தகவல்களால் பயன்பெற்றதாக பல பெண்கள் தொலைபேசி வழியாகச் சொல்லும்போது, மனம் நெகிழ்கிறது'' என்கிறார் லாஸ்யா நரசிம்மாச்சாரி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஷிகர் தவானுக்கு மறுமணம்..! 40 வயதில் ஐரீஷ் காதலியைக் கரம்பிடித்தார்!

பாஜகவில் இணைந்த அசாம் காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர்!

கொச்சியில் விருது பெற்ற தேவிகள்!

உ.பி.: பூட்டப்பட்ட வீட்டிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சடலங்களாக மீட்பு

நாளை மதிமுக, பிப். 26-ல் மார்க்சிய கம்யூ.வுடன் திமுக பேச்சுவார்த்தை!

SCROLL FOR NEXT