FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

வீட்டின் சுவர்கள் பளபளக்க..

வீட்டின் உள் சுவர்கள் பல வேளைகளில் கரைபடிந்து விடுகின்றன. அவற்றை பளபளப்பாக்க..

வீட்டின் சுவர்கள்
பகிர்:

வீட்டின் சுவர்கள் பளபளப்பாகவே இருக்க வேண்டும் என்று நினைத்தால் அது ஏமாற்றத்தையே தரும்.

ஆனால், வீட்டின் சுவர்களையும் அவ்வப்போது துடைத்து வைத்துக்கொண்டால் கரைகள் சேராமல் பாதுகாக்கலாம்.

இப்போதெல்லாம் கடைகளில் வண்ண வண்ண ஸ்பிரே பாட்டீல்கள் வந்துவிட்டன.

Advertisement

Advertisement

சுவர்களில் அதனை ஸ்பிரே செய்து துடைத்துவிட்டாலே போதும், சுவர்கள் பளபளக்கும்.

கடுமையாக தேய்த்துத் துடைக்க வேண்டிய அவசியம்கூட இருப்பதில்லை. ஆனால் சில ஸ்பிரே பாட்டில்கள் கைகளை பதம்பார்க்கலாம்.

அலர்ஜி இருப்பவர்கள் பக்குவமாகப் பயன்படுத்துவது நல்லது.

வராண்டா, கைகள் அதிகம் படும் இடங்களில் மட்டும் இதுபோன்ற ஸ்பிரேக்களைப் பயன்படுத்தி துடைத்துவிட்டால் வீடு பல ஆண்டுகள் ஆனாலும் அழுக்கடையாமல் இருக்கும்.

எங்காவது கரை அதிகமாகப் பட்டு அதனைத் துடைத்தபிறகும் அசிங்கமாக இருந்தால் ஏதேனும் அழகிய படங்கள் அல்லது அலங்காரப் பொருள்களை அங்கே மாட்டிவைத்து, கரையை மறைத்துவிடலாம்.

சிலர், கரைப்படிந்த இடங்களில் இயற்கைக் காட்சிப் படங்களை ஒட்டிவிட்டுவார்கள். அதுவும் நல்ல யோசனைதான்.

வரைவதில் ஆர்வம் இருப்பவர்கள், கரைபடிந்த இடங்களில் ஒரு வண்ணத்தைத் தீட்டி, அதில் ஓவியங்கள் வரைந்துகொள்ளலாம். ஆனால் வரையத் தெரியாது என்றால், கலைஞர்களை வீட்டுக்கு அழைத்தால் அவர்களே வந்து ஓவியம் வரைந்து கொடுப்பார்கள். மிகக் குறைந்த செலவில் வீடும் அழகாகிவிடும். நம்மையும் பலர் கலை ஆர்வம் கொண்டவர்கள் என்று பாராட்டுவார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments