ஞாயிறு கொண்டாட்டம்

ஒத்த ஓட்டு முத்தையா

இயக்குநர் சாய் ராஜகோபால் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'ஒத்த ஓட்டு முத்தையா'.

DIN

இயக்குநர் சாய் ராஜகோபால் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'ஒத்த ஓட்டு முத்தையா'. கவுண்டமணி, யோகி பாபு, நான் கடவுள் ராஜேந்திரன், சிங்கமுத்து, சித்ரா லட்சுமணன், ரவி மரியா, வையாபுரி, ஓ. ஏ. கே. சுந்தர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

சா. காத்தவராயன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை எஸ். பி. ராஜா சேதுபதி மேற்கொள்ள கலை இயக்கத்தை மகேஷ் நம்பி கவனித்திருக்கிறார்.

அரசியலும் காமெடியும் கலந்த இந்த திரைப்படத்தை சினி கிராஃப்ட் புரொடக்ஷன் நிறுவனம் மற்றும் குட்டி ஸ்டோரி பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரிக்கின்றனர்.

இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாக்யராஜ், பி. வாசு, சினேகன் போன்றோர் கலந்து கொண்டு 'ஒத்த ஓட்டு முத்தையா' படத்தைப் பற்றி பேசினார்கள்.

அதன் பிறகு நிகழ்ச்சியில் பேசிய கவுண்டமணி, என்ன பேசுறதுன்னு தெரியல. எனக்கு முன்னாடி பேச வந்த பிரபலங்கள் எல்லோரும் 'ஒத்த ஓட்டு முத்தையா' படத்தை பத்தி பேசிட்டு போயிட்டாங்க.

குடும்பத்தோடு வந்து பார்க்கவேண்டிய படம் இது. எல்லோரும் வந்து பாருங்கள். இந்த ஒத்த ஓட்டு முத்தயாவை வெற்றி ஓட்டு முத்தையாவாக மாற்றுங்கள். விழாவிற்கு வந்திருக்கும் ரசிகர்கள், வராத ரசிகர்கள் என எல்லோருக்கும் நன்றி... என தன் பாணியில் கலகலப்பாக பேசினார் கவுண்டமணி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இனி அதிமுக அல்ல, எதிமுக! - TTV Dhinakaran

750 தாமரைகள் கொண்ட மணல் சிற்பம்: பிரதமர் மோடிக்கு பட்நாயக் வாழ்த்து!

Jailer 2 ரிலீஸ் குறித்து Rajinikanth!

மெட்ராஸ் ஐஐடி-ல் புராஜெக்ட் அசோசியேட் பணி

மோடியின் தாயார் ஏஐ விடியோ: உடனே நீக்க காங்கிரஸுக்கு பாட்னா உயர் நீதிமன்றம் உத்தரவு!

SCROLL FOR NEXT