சிங்கம்புணரி அருகேயுள்ள பிரான்மலை குடவரைக் கோயில். 
ஞாயிறு கொண்டாட்டம்

வரலாற்று சிறப்புமிக்க பிரான்மலை..

சிவகங்கை மாவட்டத்துக்கு உள்பட்ட சிங்கம்புணரி அருகேயுள்ள மலைக் கிராமமான பிரான்மலை, கடல்மடத்தில் இருந்து 2 ஆயிரம் அடி உயரத்தில் உள்ளது.

ஆ.திலகவதி

சிவகங்கை மாவட்டத்துக்கு உள்பட்ட சிங்கம்புணரி அருகேயுள்ள மலைக் கிராமமான பிரான்மலை, கடல்மடத்தில் இருந்து 2 ஆயிரம் அடி உயரத்தில் உள்ளது. இது கிழக்குத் தொடர்ச்சி மலையின் கடைசி வெளிப்பகுதியாகும்.

1251-64-ஆம் ஆண்டுகளுக்கு இடையே ஆண்ட கோனேரின்மைகண்டான் காலத்தில் துவராபதி வேளார், பிரபாவபுரந்தரன் ஆகிய இருவரும் நிலம் அளித்தனர். இம்மடி நரசிங்கராயர் காலத்தில் 'பிரான்மலைச்சீமை' என்றும், திருமலை நாட்டுப்பகுதியான 'பிரான்மலை' என்றும் குறிக்கப்பட்டுள்ளது. திப்பரசரையன் நன்மைக்காக, கேரளசிங்க வளநாட்டு இப்புலிநாயகர் நிலம் அளித்தார்.

மலையடிவாரத்தில் அகழி, மருது கோட்டையின் தடயங்கள் உள்ளன.

இங்குள்ள கொடுங்குன்றீஸ்வர் கோயில் வரலாற்று சிறப்புமிக்கதாகும். பைரவர் கோயிலும் உள்ளது. பாண்டவத் தீர்த்தங்கள் என்று அழைக்கப்படும் மலையின் பாறைகளில் ஐந்து பீடங்கள், அதன் உச்சியில் வலியுல்லா ஷேக் அப்துல்லா ஷாஹேப்பின் தர்காவும் உள்ளது.

கடையேழு வள்ளல்களில் ஒருவரான பாரி இந்த பகுதியை ஆண்டார். 17- ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து 1801 வரை மருதுபாண்டியர் ஆட்சியில் இருந்த நாள்களில் தரிசு மலை அடர்ந்த வனப்பகுதியால் மூடப்பட்டதாம்.

பாண்டியர்கள் ஆட்சியில், மலைக்கோயிலுக்கு படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. காளையார்கோவிலுடன் தொடர்புடைய சிவகங்கை மருது சகோதரர்கள் இந்தக் கோயிலுக்கும் திருப்பணிகளைச் செய்துள்ளனர்.

பிரான்மலை மெயின், மாதகுபட்டி, புதுப்பட்டி, பாப்பாபட்டி, அடியார்குளம் என ஐந்து பகுதிகள் பிரான்மலையில் உள்ளன.

குடவரைக் கோயில்.

பிரான்மலை மேருமலையின் ஒரு தொகுதி எனப்படுகிறது. ஆதிசேஷனுக்கும் , வாயுவுக்கும் இடையே நடைபெற்ற போரின்போது வீசப்பட்ட மலை என்கின்றனர். மலை சிவலிங்க வடிவில் இருப்பதால் , 'பிரசந்திரகிரி' என்றும் 'காடோரகிரி' என்றும் அழைக்கப்படுகிறது.

பிரம்மா , சரஸ்வதி , சுப்ரமணியர், நந்தி உள்ளிட்டோர் இங்குள்ள சிவனை வழிபட்டதாகவும், சிவன்-பார்வதி திருமணக் கோலத்தை அகத்தியருக்கு இங்கு அருளியதாகவும் தல வரலாறு. திருமணக் காட்சியை விளக்கும் இயற்கை கல் சிற்பம் மலையில் உள்ளது.

சிவன் மங்கைபாகர் (மங்கை நாயகர் என்றும், பார்வதி தேவி தேனம்மாள் என்றும் அழைக்கப்படுகின்றனர். மங்கை பாகர் சிலை ஒன்பது மூலிகைகளால் ஆனது.

சுமார் 30 ஏக்கர் பரப்பளவிலான கோயிலில் மூன்று பிரகாரங்கள், ஐந்து அழகான விமானங்கள் உள்ளன. மூன்று அடுக்கு குடவரைக் கோயிலாகும்.

கோயிலில் நந்திகள், கொடிமரங்கள், பலி பீடங்கள் எதுவும் இல்லை. முருகன் யானையுடன் காட்சியளிக்கிறார். தேவசபா மண்டபம் உள்ளது. இங்குள்ள புனித மரம் உறங்காபுளி (புளி) ஆகும். விசித்திரமாக, புளி மரத்தின் இலைகள் மடிக்காமல், காய்கள் பழுக்காமல் விழும். சூரியக் கதிர் அக்டோபர்-நவம்பர் முதல் மார்ச்-ஏப்ரல் வரை தொடர்ந்து கருவறையில் விழும்.

இந்தக் கோயில் குறித்து திருஞானசம்பந்தர் தேவாரப்பதிகத்தை இயற்றினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இபிஎஸ் இனி முகமூடியார் பழனிசாமி என்று அழைக்கப்படுவார்! - TTV Dhinakaran

இன்று முதல் 3 நாள்களுக்கு கனமழை எச்சரிக்கை!

விராலிமலை: 3 அரசு துணை சுகாதார நிலையங்கள் தேசிய தரச்சான்று விருது பெற்று சாதனை

எடப்பாடியார் இன்றுமுதல் முகமூடியார் என்று அழைக்கப்படுவார்! டிடிவி தினகரன்

இட ஒதுக்கீடு போராட்டத் தியாகிகள் நினைவு நாள்: ராமதாஸ், அன்புமணி தனித்தனியே மரியாதை!

SCROLL FOR NEXT