திருமணம் சார்ந்த நிகழ்வுகள் நிறையவே மாறுபடும். உலக அளவில் பார்த்தால் சில செயல்பாடுகள் விசித்திரமாய் இருக்கும். மணப்பெண், மணமகன் சார்ந்து பல விநோதங்கள் நடக்கும். அந்த வகையில் சில விசித்திரச் செயல்பாடுகள்.
இந்தியா:
நம் நாட்டில் பல்வேறு பகுதிகளில் மணப்பெண்ணின் சகோதரிகள், மாப்பிள்ளையின் ஷுக்களை 'அபேஸ்' செய்து, பின்னர் ஒரு குறிப்பிட்ட தொகையை டிமாண்ட் செய்து பெற்றதும் திருப்பித் தருவர்.
சீனா:
துஜியா இனப் பெண்கள் திருமணத்துக்கு ஒரு மாதம் இருக்கும் முன்பே அழ ஆரம்பித்துவிடுவர். மகிழ்ச்சி, நன்றியின் அடையாளமாக இதைக் கருதுகின்றனர்.
ஸ்காட்லாந்து:
தோழியர், பெண்ணின் குடும்பத்தினர் மணப்பெண்ணின் முகத்தை புகைக்கரி, இறகுகள், மாவால் மறைத்து நகர் முழுவதும் ஊர்வலமாக அழைத்து வருவார்கள். இப்படி செய்வதின் மூலம் திருமணத்துக்குப் பின்னர் வரும் எத்தகைய சங்கடங்களையும் அந்த பெண் சமாளித்து விடுவார் என்ற நம்பிக்கையே இதற்கு காரணம்.
கென்யா:
மாசாய் இன மணப்பெண்ணை அவரது தலையிலும் நெஞ்சிலும் தந்தை துப்புவார். இது நல்ல அதிர்ஷ்டம், ஆசிர்வாதங்களை கொண்டு வந்து சேர்க்கும் என்கிறார்கள்.
தென் கொரியா:
முதல் நாள் இரவு மணமகனின் காலில் மீனால் அல்லது குச்சியால் அடிப்பர். மணமகனின் வலு, குணாதிசயத்தை இதன்வாயிலாக அறிய முடியும்.
ஜெர்மனி:
'போல் டெரா பெண்ட்' என்ற வழக்கத்தின்படி, மணமக்கள், உறவினர்கள் போர்சிலையினாலான பொருள்களை வைத்து உடைப்பர். இது தீய சக்திகளை விரட்டி விடும் என்ற நம்பிக்கை.
சுவீடன்:
திருமணத்தின்போது, மணமகன் அல்லது மணப்பெண் இருந்த அறையை விட்டு அகன்றதும், அங்கு மீதம் உள்ள பொருட்களை மற்ற உறவினர்கள் எடுத்து அவற்றிற்கு முத்தம் கொடுப்பார்களாம்.
இந்தோனேஷியா:
டிடோங் இன மக்களிடையே ஒரு நூதன பழக்கம் உண்டு. திருமணம் முடிந்ததும் மணமக்களை மூன்று பகல், இரவு குளியலறைப் பக்கம் போகவே தடை செய்து விடுவார்கள். திருமணமானாலும், நாலும் இருக்கும். அது எல்லாத்துக்கும் அனுசரித்து போக வேண்டும் என்பதற்காகவே இது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.