வட சென்னையில் உள்ள கொடுங்கையூர் முத்தமிழ் நகரில், பராமரிப்பின்றி இருந்த பூங்காவை தனது சொந்த செலவில் புதுப்பித்துள்ளார் சமூக ஆர்வலர் சையத் அலிகான்.
அவரிடம் பேசியபோது:
'வட சென்னையில் தொழிலாளர்கள், ஏழைகள், நடுத்தர மக்கள்தான் அதிகம் வசிக்கின்றனர். அதிலும், முத்தமிழ்நகர் வாசிகளும் அவ்வாறே உள்ளனர். இவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாலும், அவர்களின் வாரிசுகளின் கல்வி இடைநிற்காமலும் இருக்க என்னால் முடிந்தளவுக்கு உதவிகளையும், வழிகாட்டுதல்களையும் மேற்கொண்டுவருகிறேன்.
முத்தமிழ் நகர் 4, 5- ஆவது பிளாக் பகுதியில் உள்ள மாநகராட்சி பூங்கா பராமரிப்பு இல்லாத நிலையில், கழிவுகள் நிறைந்து சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியிருந்தது. இந்தப் பூங்கா குழந்தைகள் விளையாடுவதற்கோ, பொதுமக்கள் நடைப் பயிற்சி, உடற்பயிற்சி செய்வதற்கு ஏற்றதாக இல்லாமல் இருந்தது. அந்தப் பூங்காவை எனது சொந்த நிதியில் ரூ.10 லட்சம் மதிப்பில் புதுப்பித்துள்ளேன். தற்போது பூங்கா புதியதொரு பரிமாணம் பெற்றுள்ளது.
பூங்காவில் குழந்தைகளுக்கான உடற்பயிற்சி சாதனங்கள், நடைபாதைகள், முதியோருக்கான பயிற்சி உபகரணங்கள் உள்ளிட்ட நவீன அம்சங்களுடன் அமைக்கப்பட்டுள்ளன. பூங்காவில் சிசி டிவி கேமிரா பொருத்தப்பட்டு, கண்காணிப்புப் பணியில் மேற்கொள்ளப்படுவதால், சமூக விரோதச் செயல்களும், தவறான நோக்கத்துக்காக வருவோரும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்தப் பூங்காவின் பராமரிப்புக்காகவும், தொடர் மேம்பாட்டுக்காகவும் ஆண்டுதோறும் ரூ.1.50 லட்சம் செலவு செய்ய முடிவு செய்துள்ளேன்' என்கிறார் சையத் அலிகான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.