முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

புது இசை வரவு

சேரன் பாண்டியன்', சிந்துநதிப்பூ' உள்ளிட்ட படங்களின் பாடல்கள் மூலம் தனித்து உருவெடுத்தவர் இசையமைப்பாளர் சௌந்தர்யன்.

Updated On : 1 ஜூன், 2025 at 11:46 AM
பகிர்:

சேரன் பாண்டியன்', சிந்துநதிப்பூ' உள்ளிட்ட படங்களின் பாடல்கள் மூலம் தனித்து உருவெடுத்தவர் இசையமைப்பாளர் சௌந்தர்யன். இவரின் மகன் அமர்கீத் தற்போது இசையமைப்பளாரக தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகியுள்ளார். தற்போது திரையரங்குகளில் வெளியாகியுள்ள மையல்' பட பாடல்களில் தனித்த அடையாளம் பெற்றுள்ளார்.

இது குறித்து அமர்கீத்... ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்கள் கேட்டு வளர்ந்த தலைமுறையைச் சேர்ந்தவன் நான். அப்பா இசையமைப்பாளர் என்பதால் எப்போதும் இசை மீது பற்று அதிகம். இசை குறித்த தேடல்கள், என்னென்ன புதுமைகளை யார் யார் செய்திருக்கிறார்கள் என்றெல்லாம் மனதில் அலை அடிக்கும். இசை குறித்தே என் கல்விச் சூழலையும் உருவாக்கிக் கொண்டேன்.

தனி ஆல்பங்களில் ஆர்வம் ஏற்பட்டு அதை நண்பர்களுடன் சேர்ந்து உருவாக்கினேன். மையல்' படம் மூலம் சினிமா வாய்ப்பு கிடைத்தது. நல்ல களம். கிராமத்துச் சூழல். மெல்லிசை, மனதை வருடும் குரல்கள், கவிதையாய் பேசும் வரிகள் இவை அனைத்தும் இணையும் போது, இசை மீட்டுபவர்களின் உள்ளங்களை தீண்டும் ஒரு மந்திரம் உருவாகிறது.

கூட மேல கூட வச்சு..., கண்கள் இரண்டால்...' போன்ற இனிமை நிரம்பிய பாடல்களின் வரிசையில் இப்போது இணையப்போகும் இன்னொரு பாடல் என்னடி செஞ்ச என்னோட நெஞ்ச...'. படத்தில் வந்துள்ள அத்தனை பாடல்களுக்கும் நல்ல வரவேற்பு. கதையும் கதைக்கேற்ற காட்சிமொழியும் ரசிகனுக்கு உணர்வோடு கலப்பதற்கு பின்னணி இசை மிகவும் முக்கியம். அதையும் நிச்சயம் கொண்டு வருவேன்.

நமக்கு எல்லாமே இளையராஜாதான். பறவைகள் தடயங்களே இல்லாமல் போய் விடுகின்றன. அவற்றின் எச்சங்கள் மரங்களாவதைப் போலத்தான் இசையும், பாடல்களும். இசையின் எல்லா நுணுக்கங்களையும் இளையராஜா தொட்டு விட்டார். இனி என்ன இருக்கிறது...

இந்தத் தலைமுறைக்கு அவர் கொண்டு போய் சேர்க்க நினைக்கிற இசையை இன்னும் தந்து கொண்டுதான் இருக்கிறார். இப்போது இசையின் வடிவம் மாறியிருக்கலாம். உயிரோட்டம் மாறியிருக்கலாம். எத்தனை காலம் ஆனாலும் ராஜாவின் இசை மாறாது. அது மாதிரியான ஓர் இடமே எனது இலக்கு'' என்றார் அமர்கீத்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.