ஞாயிறு கொண்டாட்டம்

கரூர் டூ துபை...

பெங்களூரில் பெருநிறுவனத்தில் பணியாற்றி வந்த பிரதீப் கண்ணன் தனது பணியைத் துறந்து, சொந்த ஊரான கரூரில் பலூடா ஐஸ்கிரீம் விற்பனை நிலையத்தைத் தொடங்கினார்.

பனுஜா

பெங்களூரில் பெருநிறுவனத்தில் பணியாற்றி வந்த பிரதீப் கண்ணன் தனது பணியைத் துறந்து, சொந்த ஊரான கரூரில் பலூடா ஐஸ்கிரீம் விற்பனை நிலையத்தைத் தொடங்கினார். இந்தத் துணிச்சலான நடவடிக்கையே 'தி பலூடா ஷாப்' உருவாக்கத்துக்கு 2019இல் வழிவகுத்தது. ஆறு ஆண்டுகளில் நாடு முழுவதும் மட்டுமன்றி, துபையிலும் என 18 விற்பனை நிலையங்களைத் திறந்துள்ளார்.

அவர் தனது வெற்றியின் ரகசியம் குறித்து கூறியது:

'பெங்களூர் ஆரக்கிள் நிறுவனத்தில் காலை 9 முதல் மாலை 5 வரையில் பணியாற்றி வந்த வசதியான வேலையை ராஜிநாமா செய்ததேன். 'நிலையான தொழில், நல்ல சம்பளம், டென்ஷன் இல்லாத வாழ்க்கை' யிலிருந்து விலகி, சொந்த ஊரான கரூர் திரும்பினேன். 'என்னை பைத்தியம்' என்று உடனிருந்தோர் கூறினர்.

பலூடா, ஐஸ்கிரீமை விற்பனை செய்யத் துணிச்சலுடன் முடிவு எடுத்தேன். சிறிய விற்பனை நிலையத்துடன் பயணம் தொடங்கியது. படிப்படியாக 'தி பலூடா ஷாப்' ஆக மாறியது. நான் எடுத்த முடிவு சரியானது என்று விற்பனை நிலையங்களின் எண்ணிக்கை கூடியதிலிருந்து உறுதியாகியுள்ளது.

இந்தியாவின் அடுத்த லட்சிய 'டி2சி' ஐஸ்கிரீம் பிராண்டை உருவாக்கி வருகிறேன். இது ஓர் ஆரம்பம் மட்டும்தான். புதிய வணிகத்தில் அதிக பணம் சம்பாதிப்பது மட்டுமே குறிக்கோளாக இருக்கக் கூடாது. அப்படியான குறிக்கோள் எப்போதும் 'சிறந்தது' என்று சொல்ல முடியாது. அர்த்தமுள்ள வேலையைச் செய்வதும், நீண்டகால மதிப்பை உருவாக்குவதும், மதிப்பைக் கூட்டுவதும் வர்த்தகத்தில் ஆரம்பத்தில் எப்போதும் சவாலாகவே இருக்கும்.

நின்று சமாளித்தால் பிறகு வெற்றி தொடர்கதை. எனது வெற்றியைக் கண்டு நண்பர்களுக்கு சந்தோஷம்தான்!' என்கிறார் பிரதீப் கண்ணன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோயிலில் திருடிவிட்டு மதுபோதையில் மயங்கிக் கிடந்த நபா் கைது

பிகாரைப் போல தமிழகத்தில் தே.ஜ.கூட்டணி வெற்றி பெறாது: நெல்லை முபாரக்

கரிவலம்வந்தநல்லூரில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம்

சுற்றுலாப் பேருந்தை விரட்டிய ஒற்றை காட்டு யானை

பொதுச் சொத்துகளை சேதப்படுத்திய 3 இளைஞா்கள் கைது

SCROLL FOR NEXT