ஞாயிறு கொண்டாட்டம்

ரூபாயின் மதிப்பைச் சொல்லும் செயலி!

ரூபாய் நோட்டுகளை அடையாளம் கண்டுகொள்ளும் வகையிலான கைப்பேசி செயலியை வடிவமைத்துள்ளார் சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த நாற்பத்தொரு வயதான அப்பாஸ்.

சுதந்திரன்

ரூபாய் நோட்டுகளை அடையாளம் கண்டுகொள்ளும் வகையிலான கைப்பேசி செயலியை வடிவமைத்துள்ளார் சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த நாற்பத்தொரு வயதான அப்பாஸ்.

இந்தச் செயலியின் உருவாக்கம் குறித்து, அப்பாஸ் கூறியது:

'பார்வை இழந்தவர்களை ஏமாற்றும் நெஞ்சில் ஈரமில்லாதவர்களிடமிருந்து காப்பாற்ற எனது அனுபவத்தையும் கணினி அறிவையும் பயன்படுத்த முடிவு செய்ததன் விளைவுதான் பத்து ரூபாய் முதல் ஐந்நூறு வரையுள்ள ரூபாய் நோட்டுகளின் மதிப்பைக் கண்டுபிடிக்கும் செயலி.

அலைபேசியில் எனது செயலியை பதிவேற்றம் செய்து, அலைபேசியை 'ஆன்' செய்தால் செயலி தானே உயிர் பெற்றுவிடும். அலைபேசியின் காமிராவும் வேலை செய்ய ஆரம்பிக்கும். எந்த ரூபாய் நோட்டின் மதிப்பு தெரிய வேண்டுமோ, அதற்குப் பக்கத்தில் அலைபேசியை கொண்டு சென்றால் காமிரா வழி ஸ்கேன் செய்து நோட்டின் மதிப்பை ஸ்பீக்கர் வழியாக தமிழில் கேட்கலாம்.

கையில் பல ரக ரூபாய் நோட்டுகள் இருந்தாலும் அவற்றை அலைபேசியின் காமிரா பார்க்கும்படி வைத்தால், அவற்றையும் கணக்கிடும், மொத்தம் இவ்வளவு தொகை இருக்கிறது என்றும் இத்தனை நோட்டுகள் இருக்கின்றன என்றும் தமிழில் அறிவிக்கும். இதனால் பார்வை இழந்தவர்கள் பணத்தை கடையில் கொடுக்கும்போதும், பெறும்போதும் சரி பார்த்துக் கொள்ளலாம்.

பார்வை இல்லாதவர்களுக்கு காதுகள் கேட்கும். சிலருக்கு பார்வையும் இருக்காது. காதுகளுக்கும் கேட்கும் சக்தி இருக்காது. அத்தகைய குறை உள்ளவர்களுக்கும் இந்தச் செயலி அதிர்ந்துக்காட்டும். பத்து ரூபாய் என்றால் ஒருமுறை அதிரும்.

இருபது ரூபாய் என்றால் இரண்டு முறை, ஐம்பது ரூபாய் என்றால் மூன்று முறை, நூறு ரூபாய் என்றால் நான்கு முறை, இருநூறு ரூபாய் என்றால் ஐந்து முறை, ஐந்நூறு ரூபாய் என்றால் ஆறு முறை அலைபேசி அதிரும். அதிக நோட்டுகள் இருந்தால், மொத்த தொகையை எப்படி அதிர்வின் மூலம் தெரிவிப்பது குறித்து செயலியில் முன்னேற்றம் செய்யும் வேலைகளில் ஈடுபட்டு வருகிறேன்.

பள்ளிப் பாடப் புத்தகத்துக்கான செயலி:

தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் பாடப் புத்தகங்களில் அனைத்துப் பாடங்களில் ஏதாவது சந்தேகம் மாணவர்களுக்கோ, ஆசிரியர்களுக்கோ இருந்தால் அதற்கு முறையான விளக்கம் கொடுப்பதுடன் அந்தப் பகுதி பாடப் புத்தகத்தில் எந்தப் பக்கத்தில் உள்ளது என்பதையும் சொல்லும் செயலிக்கும் இறுதி வடிவம் கொடுத்து வருகிறேன்' என்கிறார் அப்பாஸ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மோந்தா புயல்: 100 ரயில்கள், ஏர் இந்தியா, இண்டிகோ விமானங்கள் ரத்து!

என் வாழ்நாள் முழுவதும் போற்றும் படம் பைசன்: அனுபமா உருக்கம்!

ஆந்திரம், தெலங்கானா, ஒடிஸா, சத்தீஸ்கரில் சூறைக்காற்றுக்கான சிவப்பு எச்சரிக்கை!

சென்செக்ஸ் 150 புள்ளிகள் குறைந்தது! ஐடி, பார்மா பங்குகள் சரிவு!

உலகக் கோப்பையில் அசத்தல்; ஐசிசி தரவரிசையில் தொடர்ந்து முதலிடம் வகிக்கும் ஸ்மிருதி மந்தனா!

SCROLL FOR NEXT