ஞாயிறு கொண்டாட்டம்

விண்வெளிப் போர்..!

'பூமியில் போர் இல்லை. இனி விண்வெளியில்தான்' என்கிறார்கள்.

நாகராஜன்

'பூமியில் போர் இல்லை. இனி விண்வெளியில்தான்' என்கிறார்கள். ஆனால், விண்வெளி ஆதிக்கத்தில் யார் முதலிடம் வகிப்பது என்பதற்கான போட்டி முன்னரே தொடங்கிவிட்டது. அமெரிக்காவை எதிர்க்க ரஷியாவும், சீனாவும் வரிந்து கட்டியுள்ளன.

2007-இல் 850 அடி உயரத்தில் பறந்த செயலற்றுப் போன காலநிலையைக் கண்காணிக்கும் ஒரு செயற்கைக்கோளை சீனா அழித்தது. இதையடுத்து, அதிக உயரத்தில் பறக்கும் விண்கலங்களை அழிக்கும் தனது ஆற்றலை அந்த நாடு மேம்படுத்தியுள்ளது.

இதற்குப் பதிலடி அளிக்கும் வகையில், 'லோ எர்த் ஆர்பிட்' என்னும் பூமியின் கீழ் சுற்றுப் பாதையில் பறக்கும் விண்கலங்களை அழிக்கும் தன் திறனை 'நுடோல் மிசைல் சிஸ்டம்' என்ற முறையில் வடிவமைத்து விண்வெளிப் போர்த் திறனை ரஷியாவும் காட்டியுள்ளது.

அமெரிக்காவைவிட போர்த்திறனில் முன்னணியில் இருக்கிறோம் என்பதை உலகுக்குக் காட்டுவதே இவ்விரு நாடுகளின் நோக்கமாகும். 'ஏ.எஸ்.ஏ.டி.' (ஆன்டி சாட்லைட் வெபன் அமைப்பு) என்பதே விண்வெளியில் யார் அதிக ஆதிக்கம் செலுத்தப் போகிறார்கள் என்பதை நிர்ணயிக்கும் அமைப்பாகும்.

அமைதியாக நடக்கும் இந்த விண்வெளி யுத்தத்தில் தேவையான ஆயுதங்கள் அமெரிக்காவிடம் அதிகமாக இல்லை. செயற்கைக்கோள்களை அழிக்கும் இந்தப் போர் தாக்குதல் விண்வெளி முழுவதும் விண்வெளிக் குப்பையை உருவாக்கும். குப்பைகள் ஒன்றோடு ஒன்று மோதினால் அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும்.

2007 ஜனவரியில் சீனாவின் ஒரு செயற்கைக்கோள் வெடிக்க 40 ஆயிரம் விண்வெளிக் குப்பைத் துகள்கள் உருவாயின. ஒரு செ.மீ.க்கும் குறைவாகவே இந்தத் துகள்கள் இருந்தன.

இப்படி விண்வெளியில் போர் உருவானால் அங்கு மனிதர்கள் பயணப்படுவது பாதிக்கப்படும். வணிகச் செயற்கைக்கோள்கள் செல்வதும் தடைபடும். இப்போதிருக்கும் கீழ் சுற்றுப்

பாதையை விட மேலே இன்னும் அதிகமாகப் பயணப்படுவதும் கடினமாகிவிடும்.

1957-ஆம் ஆண்டில் ஏற்பட்ட விண்வெளி ஒப்பந்தம் மீறப்படுமானால் அதற்கான நஷ்ட ஈட்டை போரில் ஈடுபடும் நாடுகள் தர வேண்டியிருக்கும்

செயற்கைக்கோள்கள் பாதிக்கப்படுமானால் செல்போன் சேவை, ஜி.பி.எஸ். அமைப்பு, தொலைக்காட்சிச் சேவை உள்ளிட்ட தகவல் சாதனங்கள் பாதிக்கப்படும். இவை இல்லாத உலகத்தை நினைத்துப் பார்க்க முடியுமா?

2017-ஆம் ஆண்டிலிருந்து தன்னை விண்வெளித் தாக்குதலிலிருந்து காத்துக் கொள்ள அமெரிக்காவின் விமானப் படையானது 'ரெட் டீம்' என்ற சிவப்புப் படையைத் தயார்படுத்தி, ஆண்டுக்கு ஒருமுறை விண்வெளித் தற்காப்பு ஒத்திகையை நடத்தி வருகிறது.

முதலில் 1992-ஆம் ஆண்டில் ரஷியாவே விண்வெளிப் படை ஒன்றைத் தனக்காக உருவாக்கியது. இது பின்னர் அந்த நாட்டின் விமானப் படையுடன் இணைக்கப்பட்டது.

2025-ஆம் ஆண்டில் சீனா, அமெரிக்கா ஆகிய இரு நாடுகள் மட்டுமே தனி விண்வெளிப்படைகளுடன் செயல்பட்டு வருகின்றன. ஸ்பெயின், பிரான்ஸ், நெதர்லாந்து உள்ளிட்ட பல நாடுகள் தங்கள் விமானப் படைக்கு 'விண்வெளிப் படை' என்ற மாற்றுப் பெயரை அமைத்துள்ளன.மண்ணிலும், விண்ணிலும் இனி ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது அவசியம்தான்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளைய மின் தடை

நாகா்கோவில் தொழிலாளி கொலை வழக்கில் தேடப்பட்டவா் 2 ஆண்டுகளுக்குப் பின் கைது

கிள்ளியூரில் நாளை நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்

வட்டவிளை, கோணம் பகுதியில் பல்நோக்கு சமுதாய நலக்கூடம், திறன் பயிற்சி கட்டடம் திறப்பு

பெண் தொழில்முனைவோா் வங்கி கடன் பெற விண்ணப்பிக்க அழைப்பு

SCROLL FOR NEXT