50 நாடுகளின் கொடிகளை வேகமாக அடையாளம் கண்டு அந்தந்த நாடுகளின் பெயரைச் சொல்லி, அகில இந்திய சாதனையை நிகழ்த்தியிருக்கிறார் இசக்கி தஷ்வந்த். செங்கல்பட்டைச் சேர்ந்த சரத் சந்த் - ரேகா தம்பதியின் மகனான இசக்கி தஷ்வந்த்திற்கு ஆறு வயதாகிறது.
நாடுகளின் கொடிகளைப் பார்த்து பெயர்களை மிகக் குறைந்த நேரத்தில் சரியாகச் சொல்ல வேண்டும் என்பதுதான் "இந்திய புக் ஆஃப் ரிக்கார்டஸ்' சமீபத்தில் நடத்திய போட்டி.பல நூறு சிறார்கள் அகில இந்திய அளவில் போட்டியில் கலந்து கொண்டனர்.
அதில் தமிழ்நாட்டிலிருந்து கலந்து கொள்ளும் சிறார்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். 2024 ஆண்டு வரை 50 நாடுகளின் கொடிகளைச் சரியாக அடையாளம் கண்டு நாட்டின் பெயர்களை 24.44 விநாடிகளில் சொன்னது அகில இந்திய சாதனையாக இருந்து வந்தது.
இசக்கி தஷ்வந்த் போட்டியில் 50 நாடுகளின் படங்களைப் பார்த்து 20.95 விநாடிகளில் கொடிகளை அடையாளம் கண்டு சொல்லி முந்தைய சாதனையை முறியடித்துள்ளார்.
இது குறித்து இசக்கி தஷ்வந்த் சொன்னது: இப்போது 152 நாடுகளின் கொடி எனக்கு மனப்பாடமாகிவிட்டது. எதிர்காலத்தில் இன்னும் அதிக நாடுகளின் கொடிகளை மிகக் குறைந்த நேரத்தில் சரியாகச் சொல்ல வேண்டும் என்று அப்பாவிடமும், பள்ளியிலும் பயிற்சி பெற்று வருகிறேன் என்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.