ஞாயிறு கொண்டாட்டம்

ஏ.ஆர். ரஹ்மானின் மூன் வாக்

பிரபுதேவா கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம், 'மூன்வாக்'. இதில் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, ராஜேந்திரன், லொள்ளு சபா சுவாமிநாதன் உள்பட பலர் நடித்துள்ளனர்.

தினமணி செய்திச் சேவை

பிரபுதேவா கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம், 'மூன்வாக்'. இதில் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, ராஜேந்திரன், லொள்ளு சபா சுவாமிநாதன் உள்பட பலர் நடித்துள்ளனர்.

மனோஜ் நிர்மலா ஸ்ரீதரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். பிஹைண்ட்வுட்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தின் அனைத்துப் பாடல்களையும் ஏ.ஆர்.ரஹ்மான் பாடியுள்ளார்.

இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா, சென்னையில் நடைபெற்றது. இதில் ஏ.ஆர்.ரஹ்மான், பிரபுதேவா ஆகியோரின் நிகழ்ச்சிகளுடன், பல நடன மற்றும் பாடல் நிகழ்ச்சிகளும் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் ஏ.ஆர்.ரஹ்மான் தாடியுடன் தோன்றினார். அவரது இந்த புதிய தோற்றம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அத்துடன் இந்த நிகழ்ச்சியில் 'மூன்வாக்' படக்குழுவினருடன் சேர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் தனது பிறந்தநாளை மேடையிலேயே கேக் வெட்டி கொண்டாடினார்.

படத்தில் இடம் பெற்ற 5 பாடல்களையும் ஏ.ஆர்.ரஹ்மான் பாடியுள்ளார். அத்துடன் இந்தத் திரைப்படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமாகிறார். அவர் தனது இணை நடிகர்களான யோகி பாபு, அஜு வர்கீஸ், அர்ஜுன் அசோகன், சாட்ஸ் மற்றும் நடன இயக்குநர் சேகர் ஆகியோருடன் இணைந்து மேடையில் நடனமாடினர்.

நடிகர் யோகி பாபு, இந்தத் திரைப்படத்தில் பதினாறு விதமான வேடங்களில் நடித்திருப்பதாகவும், இது கதையை முன்னெடுத்துச் செல்லும் மிக முக்கியமான கதாபாத்திரம் என்றும் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கேரள ஆளும் கட்சியின் வாக்கு வங்கி இஸ்லாமியர்கள்தான்: அமித் ஷா

இந்த வாரம் கலாரசிகன் - 11-01-2026

மாஞ்சோலைக் குயிலின் அறிவுரை

தெய்வப் பதிகங்களில் பதினாறு பேறுகள்

திருப்பாவை அமைப்பும் சிறப்பும்...

SCROLL FOR NEXT