ஞாயிறு கொண்டாட்டம்

அதிசயமான அரச மரம்!

பல நூற்றாண்டுகள் தாண்டி வாழக்கூடிய தன்மையுடைய அரச மரத்தை 'அஸ்வதா' என்றும், 'அமிர்தம்' என்றும் வேதங்கள் குறிப்பிடுகின்றன.

செளமியா சுப்ரமணியன்

பல நூற்றாண்டுகள் தாண்டி வாழக்கூடிய தன்மையுடைய அரச மரத்தை 'அஸ்வதா' என்றும், 'அமிர்தம்' என்றும் வேதங்கள் குறிப்பிடுகின்றன. ஓங்கி உயர்ந்தும் படர்ந்தும் வளரும் அரச மரம் மனிதர்களும் கால்நடைகளும் இளைப்பாறுவதற்கு நிழலும் தூய காற்றும் தருகிறது. அதிக அளவில் தூய காற்றை வெளியே விடும் தன்மையுடையதாலேயே பொதுமக்கள் கூடும் இடங்களான மைதானங்கள், அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கோயில்களில் அரச மரங்கள் வளர்க்கப்பட்டுள்ளன. காற்றைச் சுத்தப்படுத்து

வதும், தொற்றுகள் பரவுவதைத் தடுப்பதும் மட்டுமல்லாது அதிக அளவிலான மருத்துவக் குணங்களும் கொண்டுள்ளது.

ஆனி முதல் ஆவணி மாதம் வரையில் பூக்கும் இந்த மரம் தெய்வத் தன்மையுடையது என நம்பப்படுவதால், இதனை கோயில்களில் வைத்துப் போற்றுகின்றனர்.

அரச மரத்தை வலம் வரும்போது அடி பிரதட்சணம் செய்வது போல, மெல்ல நடந்து 7 முறை மரத்தைச் சுற்றி வலம் வரவேண்டும். அதிகாலை வேளையில் வலம் வருவதே நல்லது.

அரச மரத்தில் கயிறு, துணிகள் இவற்றை நாம் இறுக்கமாகக் கட்டும்போது மர விழுதுகள், கிளைகளில் ஏற்படும் காயங்களிலிருந்து வெளிப்படும் ஈரப்பசை காற்றில் கலந்து நறுமணமாக சுவாசத்தின் வழியே உடலில் சென்று உடல் கோளாறுகளை நீக்கி, ஆரோக்கியம் பெற உதவுகிறது. இதுவே 'அரோமா தெரபி' என்று அழைக்கப்படுகிறது.

அரசமர கொழுந்து இலையைப் பாலில் அவித்து சர்க்கரை சேர்த்துக் கொடுத்துவர காய்ச்சல் தீரும்.

பட்டையை இடித்துப் பொடியாக்கிக் கருகிய சாம்பலில் கொஞ்சமெடுத்து, நீரில் ஊறவைத்து வடிகட்டிக் கொடுக்க, விக்கல் தீரும்.

பட்டையின் தூளை குடிநீரில் சிறிது கொடுக்க சொறி சிரங்குகள் குணமாகும். உடல் வெப்பம் குறையும்.

இந்த மரத்தில் வளரும் புல்லுருவியின் இலையை அரைத்து பிள்ளைப்பேறு இல்லாப் பெண்களுக்கு எலுமிச்சைப் பழம் அளவு மூன்று நாள் சூதகத்திற்கு முன்பு கொடுத்துவர, சூல் அமையும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெறுப்புக் கருத்து தடைச்சட்ட மசோதாவுக்கு ஆளுநா் ஒப்புதல் அளிக்கக் கூடாது: எதிா்க்கட்சித் தலைவா்

தேசிய வேலை உறுதித் திட்டத்தில் காந்தி பெயா் நீக்கம்: காங்கிரஸ் உண்ணாவிரதம்

சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு மாதம் கடைப்பிடிப்பு

நூறு நாள் வேலை திட்டம் மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸாா் உண்ணாவிரதம்

நாமக்கல் அரங்கநாதா் கோயிலில் திருவிளக்கு பூஜை, கூடாரவல்லி விழா திரளான பக்தா்கள் பங்கேற்பு

SCROLL FOR NEXT