அரச இலைக் கொழுந்து துவையல்
வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி முதலில் மிளகாய், பருப்பு இவற்றை நல்லெண்ணெய் சிறிது ஊற்றி வறுக்கவும்.
தேவையான பொருள்கள்:
அரச இலைக் கொழுந்து - 10
கறிவேப்பிலை - இரண்டு ஆர்க்
Advertisement
Advertisement
புளி - கோலி குண்டளவு
மிளகாய் - 8
உளுந்தம் பருப்பு - 2 மேஜை கரண்டி
உப்பு - திட்டமாக
செய்முறை:
வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி முதலில் மிளகாய், பருப்பு இவற்றை நல்லெண்ணெய் சிறிது ஊற்றி வறுக்கவும். அதோடு அரசிலை, கறிவேப்பிலையும் சேர்த்து வதக்கி, புளியும் வதக்கி, ஆறியதும் துவையலாக அரைத்துச் சாப்பிடலாம்.
இது சிறுநீர் மண்டலத்துக்கு நல்லது. இதே முறையில் மந்தாரைக் கீரையையும் துவையலாக அரைத்துச் சாப்பிடலாம். சுடு சாதத்தில் துவையல் போட்டு நல்லெண்ணெய் ஊற்றிப் பிசைந்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
கே நாகலட்சுமி
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.