FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பாசிப் பயறு இனிப்பு சுண்டல்

வாணலியை அடுப்பில் வைத்து காய்ந்ததும் அதில் பச்சைப் பயறைப் போட்டு லேசாக வறுத்து எடுத்து ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.

10 அக்டோபர் 2026, 8:32 pm IST
பாசிப் பயறு இனிப்பு சுண்டல்
பகிர்:

தேவையானவை:

பாசிப்பயறு- 200 கிராம்

மிளகாய் வற்றல்- ஐந்து

Advertisement

Advertisement

கடுகு, உளுந்தம் பருப்பு, தேங்காய்த்

துருவல்- தலா ஒரு தேக்கரண்டி

வெல்லம் -ஐம்பது கிராம்

உப்பு ,எண்ணெய்- தேவையான அளவு

செய்முறை:

வாணலியை அடுப்பில் வைத்து காய்ந்ததும் அதில் பச்சைப் பயறைப் போட்டு லேசாக வறுத்து எடுத்து ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். பின்னர் அதை கழுவி ஒரு பாத்திரத்தில் போட்டு தேவையான கொதிக்கும் நீர் விட்டு வேக வைக்க வேண்டும். முக்கால் பதம் வெந்ததும் நீரை வடிய விட்டு உப்பைச் சேர்த்து கலக்க வேண்டும்.

அடுப்பில் வாணலியைப் போட்டு காய்ந்ததும் தேவையான எண்ணெய் விட்டு கடுகு ,உளுந்தம்பருப்பு, கிள்ளிய மிளகாய் வற்றல் போட்டு சிவந்ததும் பாசிப்பயறைப் போட வேண்டும். அதில் வெல்லத்தைத் தூள் செய்து போட்டு வெல்லம் கரையும்போது, தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறி கீழே இறக்க வேண்டும்.

ஆர் .ஜெயலெட்சுமி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments