FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

சிவப்பு சோளம் அடை

சிவப்பு சோளம், பருப்பு வகைகளை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி 3 மணி நேரம் ஊற வைக்கவும். வெங்காயம், கறிவேப்பிலையைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.

சிவப்பு சோளம் அடை
பகிர்:

தேவையான பொருள்கள்:

சிவப்பு சோளம் - அரை கிண்ணம்

துவரம்பருப்பு - கால் கிண்ணம்

Advertisement

Advertisement

உளுந்தம்பருப்பு - 2 தேக்கரண்டி

மிளகாய் வற்றல் - 4

பெரிய வெங்காயம் - 1

சீரகம் - அரை தேக்கரண்டி

பெருங்காயம், கறிவேப்பிலை, உப்பு, நல்லெண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

சிவப்பு சோளம், பருப்பு வகைகளை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி 3 மணி நேரம் ஊற வைக்கவும். வெங்காயம், கறிவேப்பிலையைப் பொடியாக நறுக்கி வைக்கவும். மிக்ஸியில் ஊற வைத்தவற்றை தண்ணீர் வடித்துப் போட்டு மிளகாய் வற்றல், பெருங்காயம், உப்பு சேர்த்து கொஞ்சம் கொரகொரப்பாக அரைக்கவும். அரைத்த மாவுடன் சீரகம், மஞ்சள் தூள், நறுக்கின வெங்காயம், கறிவேப்பிலைகளைச் சேர்த்து கலக்கவும். கரைத்து வைத்திருக்கும் மாவை மெல்லிய அடைகளாக வார்க்கவும். மேலே எண்ணெய் விட்டு புரட்டி, வெந்ததும் எடுக்கவும்.

நாகஜோதி கிருஷ்ணன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments