முகப்பு

பலாப்பழ ஸ்பெஷல் உணவுகள்

பலாப்பழ ஸ்பெஷல் உணவுகள் செய்யும் முறை.

12 வினாடிகள் முன்பு
பலாப்பழ ஸ்பெஷல் உணவுகள்
பகிர்:

பலாக்காய் கட்லட்

தேவையான பொருள்கள்

பலாக்காய் (அரைத்தது)- 1 கிண்ணம்

Advertisement

Advertisement

வேக வைத்த வாழைக்காய் - 2

வெங்காயம் - 1 (நறுக்கியது)

பச்சை மிளகாய் - 2

இஞ்சி பூண்டு விழுது - 1 மேசைக்

கரண்டி

மிளகாய்த் தூள், கரம் மசாலா -தலா அரை மேசைக்கரண்டி

உப்பு, கொத்துமல்லி - சிறிதளவு

பிரெட் தூள் -அரை கிண்ணம்

மைதா - 2 மேசைக்கரண்டி

எண்ணெய் - பொரிக்க.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் பலாக்காய், வாழைக்காய் சேர்த்து நன்றாக மசிக்கவும். அதில் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, மசாலா, உப்பு சேர்த்து கலக்கவும். சிறிய உருண்டைகளாக செய்து, கட்லெட் மாதிரி தட்டவும். மைதா, தண்ணீர் சேர்த்து கெட்டி யான மாவு தயாரிக்கவும். கட்லெட்டை மாவில் நனைத்து பிரெட் தூளில் உருட்டவும். எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

பலாப்பழ ஜெல்லி

தேவையான பொருள்கள்:

பலாப்பழச்சுளை - 1 கிண்ணம்

பால் - 200 மிலி

கடல் பாசி - 5 கிராம்

சர்க்கரை - 50 கிராம்.

செய்முறை: பலாப்பழத்திலிருந்து விதையை நீக்கி துண்டுகளாக வெட்டவும். வாணலியை சூடாக்கி அதனுடன் பால் சேர்த்து கொதிக்கவிடவும். இப்போது அதில் கடல் பாசியைச் சேர்த்து நன்கு கலக்கவும், அது கரைந்துவிடும். அதன் பிறகு சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும். இப்போது பலாப்பழத்தை மிக்ஸியில் சேர்த்து பேஸ்டாக அரைக்கவும். இந்த பேஸ்ட்டை பால் கலவையுடன் சேர்த்து நன்கு கலக்கி ஒரு சிறிய கிண்ணத்தில் மாற்றி 30 நிமிடங்களுக்கு குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும். ஜெல்லி தயார்.

பலாப்பழ பஜ்ஜி

தேவையான பொருள்கள்:

பலாப்பழம் ( துண்டுகள்) - 2 கிண்ணம்

கடலை மாவு -1 கிண்ணம்

அரிசி மாவு - 2 மேசைக்கரண்டி

மிளகாய்த் தூள் - 1 மேசைக்கரண்டி

மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி

சீரகம் - அரை மேசைக்கரண்டி

பெருங்காயம், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை: பலாப்பழத்தை சுத்தம் செய்து நீளமாக நறுக்கி சிறிது உப்பு சேர்த்து ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய்த் தூள், மஞ்சள், சீரகம், பெருங்காயம், உப்பு சேர்த்து கலக்கவும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அடர்த்தியான பஜ்ஜி மாவாக தயார் செய்யவும். வாணலியில் எண்ணெய் சூடானதும் பலாப்பழத் துண்டுகளை மாவில் தோய்த்து, மிதமான தீயில் பொன்னிறமாகப் பொரிக்கவும்.

பலாப்பழ அப்பம்

தேவையான பொருள்கள்:

பலாப்பழச் சதை - 1 கிண்ணம்

(நன்றாக அரைத்தது)

கோதுமை மாவு / அரிசி மாவு -

1 கிண்ணம்

வெல்லம் - முக்கால் கிண்ணம்

தேங்காய்த் துருவல் - கால் கிண்ணம்

ஏலக்காய்த் தூள் - கால் மேசைக்கரண்டி

உப்பு, பேக்கிங் சோடா - தலா ஒரு சிட்டிகை

நெய் - பொரிக்கத் தேவையான அளவு

செய்முறை: வெல்லத்தைச் சிறிது தண்ணீரில் கரைத்து வடிகட்டவும். ஒரு பாத்திரத்தில் அரைத்த பலாப்பழம், வெல்லப்பாகு, மாவு, தேங்காய்த் துருவல், ஏலக்காய்த் தூள், உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும். அடர்த்தியான மாவாக இருக்க வேண்டும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்க்கலாம். வாணலியில் எண்ணெய் சூடானதும், சிறிய கரண்டியால் மாவை ஊற்றி மிதமான தீயில் இருபுறமும் பொன்னிறமாகப் பொரிக்கவும்.

-நாகஜோதி கிருஷ்ணன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.