FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

காளான் கட்லட்

ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து நறுக்கிய வெங்காயம், கேரட், பீன்ஸ், காளான் சேர்த்து உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.

18 அக்டோபர் 2026, 4:20 pm IST
காளான் கட்லட்
பகிர்:

தேவையான பொருள்கள்:

நறுக்கிய காளான் - கால் கப்

பெரிய வெங்காயம், கேரட், உருளைக்கிழங்கு - தலா 1, பீன்ஸ் -4

Advertisement

Advertisement

சீரகத்தூள் - அரை மேஜை கரண்டி

சாட் மசாலா, கரம் மசாலாத் தூள் - தலா கால் மேஜை கரண்டி

உப்பு, எண்ணெய், ரொட்டித் தூள் - தேவையான அளவு

செய்முறை:

ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து நறுக்கிய வெங்காயம், கேரட், பீன்ஸ், காளான் சேர்த்து உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு அதனை ஒரு பாத்திரத்துக்கு மாற்றி அதனுடன் வேகவைத்த உருளைக்கிழங்கு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

அதனுடன் சாட் மசாலா, மிளகுத் தூள், சீரகத்தூள் சேர்த்து சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து சிறு உருண்டையாக எடுத்து தட்டி வைத்துக் கொள்ளவும். பிரட் தூளில் தொட்டு தோசைக் கல்லில் எண்ணெய் சேர்த்து இரண்டு பக்கமும் வேகவைத்து எடுத்தால் சுவையான காளான் கட்லெட் தயார்.

நாகஜோதி கிருஷ்ணன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments