கேழ்வரகு பூரி
கேழ்வரகு மாவுடன் கோதுமை மாவு, உப்பு, ஓமம் சேர்த்து தேவையான தண்ணீர்விட்டுக் கெட்டியாகப் பிசைந்து கொள்ள வேண்டும்.
தேவையான பொருள்கள்:
கேழ்வரகு மாவு - 100 கிராம்
Advertisement
Advertisement
கோதுமை மாவு - 50 கிராம்
ஓமம் - அரை தேக்கரண்டி
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
கேழ்வரகு மாவுடன் கோதுமை மாவு, உப்பு, ஓமம் சேர்த்து தேவையான தண்ணீர்விட்டுக் கெட்டியாகப் பிசைந்து கொள்ள வேண்டும். பிறகு சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, பூரிக்குத் தேய்ப்பது போலச் சப்பாத்தி செய்யும் வட்டத்தில் தேய்த்து தயார் செய்து கொள்ள வேண்டும். வாணலியை அடுப்பில் வைத்து தேவையான எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் பூரிகளைப் போட்டு பொன்னிறமாகப் பொரித்து எடுக்க வேண்டும்.
ஆர். ஜெயலெட்சுமி