FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ட்ரை புரூட்ஸ் கொழுக்கட்டை

முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர், உப்பு, சிறிதளவு எண்ணெய் சேர்த்து கொதித்தவுடன் அரிசி மாவைப் போட்டு கலந்து கெட்டியாக்கவும்.

12 செப்டம்பர் 2026, 10:09 pm IST
ட்ரை புரூட்ஸ் கொழுக்கட்டை
பகிர்:

தேவையான பொருள்கள்:

அரிசி மாவு - 1 கிண்ணம்

பேரீச்சம்பழம், முந்திரி, பாதாம், கருப்புத் திராட்சை, பிஸ்தா -தலா 10

Advertisement

Advertisement

வெல்லம் - கால் கிண்ணம்

பொட்டுக்கடலை - 4 தேக்கரண்டி

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர், உப்பு, சிறிதளவு எண்ணெய் சேர்த்து கொதித்தவுடன் அரிசி மாவைப் போட்டு கலந்து கெட்டியாக்கவும். பிறகு உருண்டைகளாக வைத்துக் கொள்ளவும். பிறகு முந்திரி, பாதாம், பிஸ்தா, பொட்டுக்கடலை அனைத்தையும் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைக்கவும். அதில் பேரீச்சம்பழம், திராட்சை, வெல்லம் சேர்த்து மறுபடியும் கொர கொரப்பாக அரைக்கவும். இதுதான் நாம் கொழுக்கட்டைக்கு உள்ளே வைக்கப் போகின்ற பூரணம்.

அரிசி மாவு உருண்டைகளை எடுத்து அதைக் கையிலேயே கிண்ணம் போல் செய்து கொள்ள வேண்டும். அதில் நாம் செய்து வைத்துள்ள பூரணத்தைப் போட்டு தேவையான வடிவத்தில் அதனை மடித்துக் கொள்ளவேண்டும். பிறகு இட்லிப் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி இந்தக் கொழுக்கட்டைகளை ஆவியில் வேக வைத்து எடுத்தால் போதும்.

நாகஜோதி கிருஷ்ணன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments